தீக்கதிர் முக்கிய செய்திகள்
29 Sept 2026, 9:48 pm

முதல்வர் விஜய் தரப்பு எழுத்துப்பூர்வ வாதம்

சென்னை: தமிழகத்தில் 5 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையைநீக்க வேண்டும் என முதல்வர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டுஉள்ளது. பொதுநல வழக்கு என்ற பெயரில் இடைத்தேர்தலைத் தள்ளிவைக்கும் உள்நோக்கத்துடன் இது தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், உடனடியாகத் தேர்தலை நடத்தஆணையிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா வழக்கு தள்ளுபடி

சென்னை: ராஜினாமா செய்த 6 அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்களிடம் இடைத்தேர்தல் செலவை வசூலிக்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை, விளம்பரத்துக்காகத் தொடரப்பட்டது எனக் கூறி ரூ. 1 லட்சம் அபராதத்துடன் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதேகோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட முந்தைய வழக்கும் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உணவுப்படித் திட்டத்தை விரிவுபடுத்தக் கோரிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 24, 264 தூய்மைப் பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.50 உணவுப்படி வழங்கும் அரசாணைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இத்திட்டத்தை அனைத்து மாநகராட்சிகள்,நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றும், உணவுப்படியை ரூ.100 ஆக உயர்த்த வேண்டும் என்றும் அவர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

கவின் சாதி ஆணவப் படுகொலை கொலையாளியின் பெற்றோர் மீதான வழக்கு ரத்து

மதுரை, செப். 29 -தூத்துக்குடியைச் சேர்ந்த பட்டியலின மென்பொறியாளர் கவின், வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்ததால், அப்பெண்ணின் சகோதரர் உள்ளிட்டோரால் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம்தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுர்ஜித்தின் பெற்றோரும் காவல்துறைசார்பு-ஆய்வாளர்களுமான சரவணன், கிருஷ்ணகுமாரி, சம்பவ இடத்தில் தாங்கள் இல்லை என்றும், அரசியல் காரணங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் கூறி, வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். நீதிபதிஆர். விஜயகுமார் செவ்வாயன்று மனுக்களை விசாரித்து, இருவர் மீதான வழக்கை ரத்து செய்தார். அதேவேளை, உறவினர் ஜெயபாலின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஒரே நாளில் 3,297 ‘தாய்மாமன் தங்க மோதிரம்’

சென்னை: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ், ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் 3,297 குழந்தைகளுக்குத் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

முதல்வர் விஜய் இன்று பிரச்சாரம்

சென்னை: தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக முதலமைச்சர் விஜய் புதன்கிழமை அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். முதல்வரின் வருகையை முன்னிட்டு 2,000 போலீசாரின் பாதுகாப்புடன் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 4-ல் அவர் ரோடு ஷோ நடத்தியும் வாக்கு சேகரிக்க உள்ளார்.

தனியார் பேருந்து வேலைநிறுத்தம் வாபஸ்

சென்னை: கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை நடைபெறவிருந்த தனியார் பேருந்து வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அமைச்சர்கள் அளித்த உறுதிமொழியை ஏற்றுப் போராட்டத்தை ஒத்திவைத்திருப்பதாக அறிவிக்க ப்பட்டுள்ளதால், வழக்கம் போல் தனியார் பேருந்துகள் இயங்கும்.

‘மஞ்சப்பை’ திட்டத்தின் பெயர் மாற்றம்

சென்னை: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடைக்குப் பின் நடைமுறையில் இருந்த ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தின் பெயர் ‘துணிப்பை வழங்கும் திட்டம்’ என மாற்றப்பட்டுச் செயல்படுத்தத் தவெக அரசு அனுமதிஅளித்துஉள்ளது. முதல்கட்டமாக 105 இடங்களில் துணிப்பை வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்படவுள்ளன.

மதுராந்தகம்: 893 அஞ்சல் வாக்கு பதிவு

சென்னை: மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், வீட்டிலிருந்தபடியே அஞ்சல் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த 931 பேரில் 893 பேர் தங்களது வாக்குகளை வெற்றிகரமாகப் பதிவு செய்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பான வாக்குப்பதிவுக்காகத் தேர்தல் அலுவலர்கள் நேரடியாக வீடுகளுக்கே சென்று ரகசிய முறையில் வாக்குகளைப் பெற்றுள்ளனர்.