தீக்கதிர் முக்கிய செய்திகள்
20 Jun 2026, 11:58 pm

சட்டசபை நேரலை நிறுத்தம்: அமைச்சர் விளக்கம்

சென்னை: தமிழக சட்டசபையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) நேரலை நிறுத்தப்பட்டது தனக்கே தெரியாது என்றும், சட்டமன்ற நேரலை தொடரும் என்பதே தவெக அரசின் நிலைப்பாடு என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நேரலை போய்க் கொண்டிருந்தது என்ற நம்பிக்கையில்தான் தானும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும், இடைவேளையின் போது காவலாளிகள் நேரலை போகவில்லை என்று சொன்னதாகவும் தெரிவித்தார். தாம் சட்டமன்றத்திற்கு உள்ளே இருந்ததால் நேரலை நிறுத்தம் பற்றி அறிய வில்லை என்று கூறினார். மீதி உள்ள கூட்டத்தொடர் நாட்களில் அதிகாரிகளிடம் பேசி நேரலை தொடரும்” என்று உறுதி யளித்தார்.

பேரவைத் தலைவருக்கு கடிதம்

சென்னை: 17 ஆவது சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதம் நேரலை ஒளிபரப்பு செய்யப் படவில்லை என்பதை கண்டித்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை (ஜூன் 20) சட்டப்பேரவைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் உதயநிதி ஸ்டாலின், ‘எதிர்க்கட்சியினரின் விவாதங்கள் முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டு, ஆளுங் கட்சியினருக்கு வேண்டிய விவாத வீடியோக்கள் மட்டும் தொகுக்கப்பட்டு மாலையில் வெளியிடப்பட்டதாக’ குற்றம் சாட்டியுள்ளார். இது சட்டமன்ற உறுப்பினர்களின் பேச்சுரி மையை நசுக்குவதாகவும், மக்களை அவமானப்படுத்துவ தாகவும், பாசிச நடவடிக்கையாகவும் இருப்பதாக அவர் வலி யுறுத்தியுள்ளார். திங்கட்கிழமை (ஜூன் 22) நடைபெ றும் அவை நடவடிக்கைகளை நேரலை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் சபாநாயகரிடம் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

செப்.21 திண்டுக்கல்லில் அரசு ஊழியர் சங்க மாநிலப் பிரதிநிதித்துவப் பேரவை வரவேற்புக் குழு அமைப்பு

திண்டுக்கல்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பிரதிநிதித்துவப் பேரவை செப்டம்பர் 21 அன்று திண்டுக்கல் எம்.எஸ்.பி ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, திண்டுக்கல்லில் வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்குத் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் முபாரக் அலி தலைமை வகிக்க, மாவட்டச் செயலாளர் சுகந்தி வரவேற் றார். பேராசிரியர் முனைவர் ஆர்.மனோகரன், எஸ். ராம மூர்த்தி, எஸ். கண்ணன் ஆகிய தொழிற்சங்க முன்னோடித் தலைவர்கள் பங்கேற்றனர். சங்கத் தலைவர்கள் ஜான் பாஸ்டின் டல்லஸ், அருண் பிரசாத் முருகேசன், முருகானந்தம், மோசஸ் விஜயகுமார் உள்ளிட்ட பலர் பேசினர். இக்கூட்டத்தில், பேரவைக்கான வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. வரவேற்புக் குழுத் தலைவராகப் பேராசிரி யர் ஆர். மனோகரன், செயலாளராகச் சுகந்தி, பொருளாளராக எஸ். முபாரக் அலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வடக்கு கேரள பகுதிகள் மேல் சுமார் 5.8 கிலோமீட்டர் உயரத்திலும், வடக்கு லட்சத்தீவு பகுதிகள் மேல் சுமார் 3.1 கிலோமீட்டர் உயரத்திலும் வளிமண்டல காற்ற ழுத்த சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் அடுத்த 6 நாட்களும் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஞாயிறன்று (ஜூன் 21) நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக் கல், தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். ஜூன் 22-இல் நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படு கிறது. ஜூன் 23 முதல் 26 வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை தொடரும். மேற்கு தொடர்ச்சி மலை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யலாம். ஜூன் 21 முதல் 24 வரை தமிழக கடலோர, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீச லாம். அரபிக்கடல் பகுதிகளில் ஜூன் 21 மற்றும் 22-இல் கர்நாடக-கேரள கடலோரம் மற்றும் லட்சத்தீவு அருகே மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச லாம். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தி யுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்-1 தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், சீர்காழி அருகே கீழச்சாலை கிராமத்தைச் சேர்ந்த அபிநயா துணை ஆட்சியர் பதவிக்கு தேர்வா கியுள்ளார். விவசாயம் பட்டப்படிப்பு மற்றும் முது கலை முடித்த அபிநயா, படிப்பு முடிந்து 2 ஆண்டு கள் கழித்தே போட்டித் தேர்வில் தீவிர கவனம் செலுத்தினார். கடந்த முறை முதன்மைத் தேர் வில் தோல்வி அடைந்த அவர், இந்த முறை வெற்றி பெற்றுள்ளார். ஏப்ரல் மாதம் நடைபெற்ற 35 நிமிட நேர்காணலில் நெல்லுக்கான ஊக்கத் தொகை குறித்த ஒன்றிய - மாநில அரசுகளின் கருத்து வேறுபாடு போன்றவை மட்டுமன்றி, சூப்பர் சிங்கர் போன்ற இசை நிகழ்ச்சி களின் சமூக தாக்கம் வரை உரையாடல் விரிந்ததாக அவர் தெரிவித்தார்.

ஜூன் 29, 30 ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மாநாடு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளின் மாநாடு ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அனைத்து மாவட்ட ஆட்சி யர்கள், காவல் கண்கா ணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை உயர் அதி காரிகள் உள்பட பல அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். தமிழ் நாட்டின் சட்டம்-ஒழுங்கு, வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் ஆட்சி நிர்வாகம் தொடர்பான விஷயங்கள் இம்மாநாட்டில் விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமை யிலான ஆட்சி அமைந்த பின்னர் நடைபெறும் முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரி கள் மாநாடு இதுவாகும். தமிழ்நாட்டில் செயல் படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு ஆகியவை குறித்து ஆய்வு செய்ய ஆண்டுதோறும் முதல மைச்சர் தலைமையில் இத்தகைய ஆலோச னைக் கூட்டம் நடைபெறு வது வழக்கம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருக்க வேண்டாம் தண்டனை சிறைவாசிகளுக்கு மாநில அரசே பரோல் தரலாம்!

சென்னை, ஜூன் 20 - உச்ச நீதிமன்றத்தில் தொடர்புடைய வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அதில் தீர்ப்பு வரும் வரை தண்டனை சிறை வாசிகளுக்கு, மாநில அரசே அவசர கால விடுப்பு மற்றும் பரோல் வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. ஆயுள் தண்டனை கைதிகள் உள்பட பலருக்கு அவசரகால விடுப்பு மறுக்கப் பட்டதை எதிர்த்து அவர்களது உறவினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி தலைமையிலான 5 நீதி பதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. மூத்த வழக்கறிஞர் அபுடு குமார், விடுப்பு பெறுவது ஒவ்வொரு தண்டனை சிறைவாசி யின் உரிமை என வாதிட்டார். அரசிய லமைப்புச் சட்டம் 21-இன் படி சிறைவாசி களுக்கும் தனிமனித சுதந்திரம் உண்டு என்றும், உயிரிழப்புகளுக்குக் கூட அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்படு வது ஏற்கத்தக்கதல்ல என்றும் அவர் குறிப் பிட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை ஏற்கெனவே வழங்கப்பட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் மாநில அரசே விடுப்பு வழங்கலாம் என தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தது.

தமிழக அமைச்சர்களின் மொபைல் எண்கள், மின்னஞ்சல் முகவரி வெளியீடு!

சென்னை, ஜூன் 20- பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு அனைத்து அமைச்சர்களின் அதிகாரப் பூர்வ தொடர்பு விவரங்களை பொதுவெளி யில் வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு மின்னஞ்சல் முகவரி மட்டும் வழங்கப்பட்டு உள்ள நிலையில், மற்ற அனைத்து அமைச்சர் களுக்கும் மின்னஞ்சல் முகவரிகளுடன் மொபைல் எண்களும் பட்டியலிடப்பட்டு உள்ளன. இந்த எண்களுக்கு வரும் அழைப்பு களை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கையாண்டு, பிரச்சனையின் தீவிரத்தை பொறுத்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.