தீக்கதிர் முக்கிய செய்திகள்
1 Jun 2026, 9:36 pm

அஞ்சலை அம்மாள் பிறந்தநாள்: முதலமைச்சர் மரியாதை

சென்னை: சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் 137 ஆவது பிறந்தநாள் திங்களன்று கொண்டா டப்பட்டது. அவரது பிறந்தநாளையொட்டி, சென்னையில் அவரது உருவப் படத்திற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் கடலூர் முதுநகரில் அம்மாக்கண்ணு - முத்துமணி தம்பதி யருக்கு மகளாக 1890 ஆம் ஆண்டு பிறந்தார். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். இவர் சிறுவயது முதல் சுதந்திரப்பற்று மிக்கவராகத் திகழ்ந்தார். 1921 ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழை யாமை இயக்கத்தைத் தொடங்கியபோது அதில் கலந்து கொண்டு தனது பொது வாழ்க்கையைத் தொடங்கினார். சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் விடுதலைப் போராட்டத்திற்காக தனது குடும்பச் சொத்து களையும், குடியிருந்த வீட்டையும் விற்று, நாட்டிற்காகத் தியா கம் செய்தார். தேச விடுதலை இயக்கத்தில் தன்னை ஈடு படுத்திக் கொண்டு சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்டார். இவரது குடும்பம் பல நாட்கள் வறுமையில் வாழ்ந்தாலும், எந்தச் சூழ்நிலையிலும் தேச நலனையே பெரும் மூச்சாகக் கொண்டு விடுதலைக்காகப் போராடியது.

தலைமைச் செயலகத்தில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு அமல்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மனிதவள மேலாண்மைத் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஜூன் 1 முதல் பயோமெட்ரிக் வருகைப் பதிவு நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந் துள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் அலுவலகங்கள் உள்ளன. நாமக்கல் கவிஞர் மாளிகை உள்பட 10 தள கட்டிடத்தில் 54 துறை செயலர்களும், பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரி களும் பணியாற்றி வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த அலுவலகங்களில் பணியாற்றுகின்றனர். காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணி நேரமாகவும், அரை மணி நேரம் உணவு இடைவேளையாகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், மனிதவள மேலாண்மைத் துறையில் வருகைப் பதிவுக்காக பயோமெட்ரிக் மற்றும் முகம் கண்டறி யும் தொடுதிரை இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஜூன் 1 முதல் அந்தத் துறையின் அதிகாரிகள் மற்றும் பணியாளர் கள் பயோமெட்ரிக் அல்லது முக அங்கீகார முறையில் கட்டாய மாக வருகை பதிவு செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து மற்ற துறைகளுக்கும் விரைவில் இம்முறையை விரிவு படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஆட்சியில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப் பட்ட போது தலைமைச் செயலக பணியாளர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட் டது. தலைமைச் செயலக வரலாற்றிலேயே பயோமெட்ரிக் வருகைப் பதிவு கட்டாயமாக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது சிறப்பு அம்சமாகும்.

சுங்கச்சாவடிகளில் புதிய கட்டணம் அமல்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 68 சுங்கச் சாவடிகளில் திருத்தப்பட்ட புதிய கட்டணங்கள் ஜூன் 1 அன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஆண்டுதோ றும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் சுங்கக் கட்டண உயர்வு நடை முறைப்படுத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் நடைமுறைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதிய கட்டண விகிதங்கள் இப்போது அமலுக்கு வந்து உள்ளன. இந்த விகிதங்கள் அடுத்த ஆண்டு மார்ச் 31, 2027 வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் ஒப்பந்த விதிமுறைகளின்படி, சுங்கக் கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் மற்றும் மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும். இந்த கட்டண உயர்வு லாரி, பேருந்து மற்றும் பல அச்சு கொண்ட பெரிய சரக்கு வாகனங்களையும் பாதிக்கும். இதனால் மாதாந்திர பாஸ் விலை அதிகரிப்புடன் அத்தியா வசியப் பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு இருப்ப தாக கவலை தெரிவிக்கப்படுகிறது.

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான விதிமுறைகளை வெளியிட வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 1 - தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த, அதற்கான விதிகளை உடனே வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அமைப்பின் பொதுச் செயலாளர் சோ.சுரேஷ் விடுத்துள்ள அறிக்கையில், “புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தக் கோரி ஜாக்டோ-ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் போராடின. இதனையடுத்து 1.1.2026-க்கு பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தபடும் என்று கடந்த ஜன.9 ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இருப்பினும் விதிகள் வெளியிடப்பட வில்லை. தவெக தனது தேர்தல் அறிக்கையில், மதிப்பீடு செய்து, பரிசீலனை செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப் படும் என குறிப்பிட்டுள்ளது. எனவே, உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அது வரை, ஏற்கெனவே, ஓய்வு பெற்றவர்களுக்கு உறுதியளிக்கப் பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான விதி களை வெளியிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆக. 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு!

சென்னை: 2011-க்குப் பிறகு 2021-இல் நடத்தப் பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய பாஜக அரசு நடத்தவில்லை. கொரோனா தொற்றைக் காரணம் காட்டிக் கொண்டது. ஆனால், அதன்பிறகும் நான்கு ஆண்டுகளாக மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான நடவடிக்கைகளைத் துவங்கவில்லை. இதுதொடர்பான கடும் விமர்சனங்கள் எழுந்தன. வழக்கு களும் தொடுக்கப்பட்டன. இந்தப் பின்னணியில், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான நடவடிக்கைகளை, பல்வேறு மாநிலங்களில் மோடி அரசு தற்போது துவங்கியுள்ளது. புதுச்சேரியில், ஜூன் 1-இல் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி துவங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, வீட்டின் வசதிகள், நிலைகள் குறித்து 33 கேள்விகள் கேட்கப்படும். அவற்றுக்கு மக்கள் பதிலளிக்க வேண்டும். தவறான தகவலை அளித்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.