தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி மாற்றம்!
8 Apr 2026, 4:35 pm

தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் சாய்குமாரும், ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி ஆக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சாய்குமார் ஐ.ஏ.எஸ், புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு, புதிய ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி ஆக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு உடனடி அமலுக்கு வர வேண்டும்; அதிகாரிகள் பணியில் இணைந்தது குறித்த பணி ஏற்பு அறிக்கையை 08.04.2026 அன்று மாலை 6:00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள், தேர்தல் தொடர்பான எந்தப் பணிகளிலும் அமர்த்தப்படக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.