தமிழகத்தில் இன்று இரவு முதல் அறவழி காத்திருப்புப் போராட்டம் வாலிபர், மாணவர் சங்கங்கள் அறிவிப்பு!
23 Jul 2026, 9:50 pm
<p><strong>தமிழகத்தில் இன்று இரவு முதல் அறவழி காத்திருப்புப் போராட்டம் வாலிபர், மாணவர் சங்கங்கள் அறிவிப்பு!</strong></p><p>சென்னை, ஜூலை 23: நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித் தும், தில்லி போராட்டத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழ்நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) இரவு முதல் அறவழி காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என்று இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறிவித்துள்ளன. இது தொடர்பாகச் சென்னையில் நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய வாலி பர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கார்த்திக், “தில்லியில் அறவழியில் போராடும் மாணவர்கள் மீது மோடி அரசு அடக்கு முறையை ஏவிவிட்டுள்ளது. நீட் முறை கேட்டிற்குப் பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” என்றார். தொடர்ந்து பேசிய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் தௌ.சம்சீர் அகமது, “’இரவு விழித்திருப்போம்; தேசத்தை விழித் தெழச் செய்வோம்’ என்ற முழக்கத்துடன் இந்தக் காத்திருப்புப் போராட்டம் நடை பெறும். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் இதில் பங்கேற்க வேண்டும்” என அழைப்பு விடுத்தார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலில் செங்கல்பட்டு, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் நிர்வாகிகள் காயமடைந்துள்ளனர் என்று அவர் குற்றம் சாட்டினார். பேட்டியின் போது மாநிலத் தலைவர் சி.மிருதுளா, மாநிலப் பொருளாளர் தீ.சந்துரு, நிர்வாகி ஜி.அரவிந்த சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
