நகராட்சி ஊழியர்கள் போராட்டம்
9 hours before

நகராட்சி ஊழியர்கள் போராட்டம்

கடலூர், ஆக.27-பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும்; பணியிட மாறுதல், பதவி உயர்வுகளை கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும்; காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும்; பதவி உயர்வுக்கான பணி விதிகளில் உரிய திருத்தம் செய்ய வேண்டும் என வலி யுறுத்தினர்.

சனி, ஞாயிறு, அரசு விடுமுறை மற்றும் அலுவலக நேரத்திற்குப் பின்னர் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதை கைவிட வேண்டும் என்றும் கோரினர்.

கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தா சலம், வடலூர், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட நகராட்சிகளில் 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.