தொகுதி மறுவரையறை மசோதாவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்! தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்
8 Aug 2026, 9:41 pm

தொகுதி மறுவரையறை மசோதாவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்!

தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை, ஆக. 8 -தொகுதி மறுவரையறை மசோதாவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்; எனவும், மக்களவைக் கான 543 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையும், தமிழகத்திற் கான 39 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையும் தொடர வேண் டும் என்றும் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற எம்.பி.க்கள் கூட்டத்தில்ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.ஒன்றிய பாஜக அரசானது, நடப்பு நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து விவாதிப்பதற்காக, தமிழக அரசு சார் பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் விஜய் தலைமையில் சனிக்கிழமையன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ் மோகன், நிர்மல்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் ப. சிதம்பரம் உள்பட 11 எம்.பி.க்கள் பங்கேற்றனர். சிபிஎம் சார்பில் சு. வெங்கடேசன், ஆர். சச்சிதானந்தம், சிபிஐ சார்பில் கே. சுப்பராயன், வை.செல்வராஜ், விசிக சார்பில் தொல். திருமாவளவன், து. ரவிக்குமார், மதிமுக சார் பில் துரை.வைகோ, ஐயுஎம்எல் சார்பில் நவாஸ்கனி ஆகியோர் கலந்துகொண்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட் டத்தில் அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்களும் தங்கள் கருத்தை தெரிவித்தனர்.

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதை எந்த வகையிலும்ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தொகுதி மறுவரையறைத் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு முற்றிலும் கைவிட வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக்கருத்து என்பதை இந்தக் கூட்டத்தின் வாயிலாக வெளிப் படுத்த வேண்டும் என்றனர். ஒன்றிய பாஜக அரசின் திட்டத் தால் ஒட்டுமொத்த தமிழகமும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், இந்தக் கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சி எம்.பி.க்களும், இந்தக் கூட்டத்தில் கலந்து கொண் டிருக்க வேண்டும் என்றும், அனைவரும் ஓரணியாகத் திரண்டு நிற் கும் நிலைப்பாட்டை ஒன்றிய அரசுக்கு உணர்த்தியிருக்க வேண்டும் என்றும் பெரும்பாலான எம்.பி.க்கள் கருத்துத் தெரிவித்தனர்.

தொகுதி மறுவரையறைத் திட்டத்தால் தமிழ்நாடு மட்டுமின்றி தென் மாநிலங்கள் அனைத்துமே பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், இந்தப் பிரச்சனை தொடர்பாகமற்ற தென் மாநில முதலமைச்சர்களும் தமிழ் நாட்டின் கருத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், அதற்கானமுயற்சிகளை மேற் கொண்டு ஒன்றிய பாஜக அரசு முன்னெடுக்கும் திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும்கூட்டத்தில் கலந்துகொண்டோர் ஆலோசனை தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்துக்குப் பின், அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், ‘தமிழகத்தின் உரிமையைப் பறிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற ஒன்றிய அரசு முயற்சித்து வருகிறது. இந்நிலையில், தொகுதி மறுவரையறைக்கு எதிராக எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்றார்.பிரதான எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாமக, மநீம, தேமுதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள்இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.