காவிரி நீரை மறுக்கும் கர்நாடகம்:உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு!
5 Nov 2026, 10:54 pm
<p><strong>காவிரி நீரை மறுக்கும் கர்நாடகம்:உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு!</strong></p><p>சென்னை, நவ. 5 –காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுத்து வரும் நிலையில், இதுதொடர்பாகத் தமிழக அரசு நவம்பர் 5ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்துள்ளது.</p><p>இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் பி. கருணாகரன் முறையிட்டார்.அக்டோபர் 23-ஆம் தேதி முதல் தமிழகத்துக்கான நீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. நாள்தோறும் 3,000கனஅடி நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும்மதிக்கவில்லை. இது மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களுக்கும், ஆணையத்தின் முடிவுகளுக்கும்எதிரானது என்று அவர் வாதிட்டார். “காவிரிப் பாசனப் பகுதிகளில் சுமார் 4 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் தண்ணீரின்றிக் கருகும் அபாயத்தில் உள்ளன. கர்நாடகம் நீரைத் திறந்துவிடவில்லை என்றால் நாங்கள் எங்கேசெல்வது?” என்றும் அவர் கேள்வியை முன்வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, இந்தவழக்கை விரைந்து விசாரிப்பதாக உறுதியளித்துள்ளது.</p>
