தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதச்சார்பின்மையிலிருந்து பிறழக்கூடாது

6 Aug 2026, 9:48 pm
மதச்சார்பின்மையிலிருந்து  பிறழக்கூடாது

மதச்சார்பின்மையிலிருந்து பிறழக்கூடாது

தமிழக வேளாண் துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட் உரையின் நகலைதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு எடுத்துச்சென்று வழிபாடு நடத்தியது பெரும் சர்ச்சையைஏற்படுத்திய நிலையில், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் சட்டமன்றத்தில் நிநிதிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு கையில் ஜெபமாலையுடன் வருகைதந்ததும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

மதச்சார்பற்ற அரசியல் சட்டத்தின் பெயரால்பதவியேற்றுக் கொண்டுள்ள அமைச்சர்களின் இந்த செயல் ஏற்கத்தக்கதல்ல. இதுகுறித்து எதிர்ப்பு எழும்நிலையில்,அமைச்சர்களுக்கு தனிப்பட்ட மத நம்பிக்கை இருக்கக்கூடாதா என்று சிலர் எதிராக கேள்வி எழுப்புகின்றனர்.அமைச்சர்கள் மட்டுமல்ல, எந்தவொரு தனி மனிதருக்கும் அவரவர் நம்புகிற மதத்தின் அடிப்படையில் வழிபாடுசெய்வதற்கு எல்லா உரிமைகளும் உண்டு. ஆனால் பட்ஜெட் என்பதுஅரசு நிர்வாகம் தொடர்புடைய ஒன்று. அது அனைத்து மத மக்களுக்கும்; இன்னும் சொல்லப்போனால் எந்த மதத்தை சாராதிருப்போர்களுக்கும் கூட பொதுவான ஒன்று.

மதச்சார்பின்மை என்பதன் ஆழமான பொருள்அரசு நிர்வாகத்தில் எந்தவொரு மதமும் குறுக்கிடக்கூடாது என்பதுதான். ஆனால் ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் அரசியல் சட்டத்திலிருந்தே மதச்சார்பின்மை என்கிற வார்த்தையைஎடுத்து விட முயன்றனர். அது சாத்தியமற்றுப் போனநிலையில், மதச்சார்பின்மை என்பதன் பொருளைநடைமுறையில் அர்த்தமிழக்கச் செய்துவிட்டனர்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழாவை ஒரு வேதமத நிகழ்ச்சிப் போலவே நடத்தினார்கள். குடியரசுத் தலைவர் கூட அந்தநிகழ்ச்சிக்கு அழைக்கப்படாத நிலையில் மடாதிபதிகள், சாமியார்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. நாடாளுமன்ற கட்டிடவடிவமைப்பே மதச்சார்புத் தன்மை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில் மதச்சார்பற்ற அரசை நிறுவுவதே தன்னுடைய முதன்மையான நோக்கம் என்று கூறி ஆட்சிக்குவந்துள்ள விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் அரசு ஆவணமானபட்ஜெட்டை மத நம்பிக்கையோடு தொடர்புபடுத்தி வெளிப்படுத்திக் கொள்வதும், அதை முதல்வர் கண்டு கொள்ளாமல் இருப்பதும் ஏற்கத்தக்கது அல்ல. இந்துத்துவா வாதிகள் இதை மறைமுகமாக ஆதரிப்பதற்கு காரணம் அரசியலை மதவெறிமயமாக்கும் தங்களது செயல்திட்டத்தை நியாயப்படுத்த தமிழகஅமைச்சர்களின் செயல்பாடு உதவியாக இருக்கிறது என்பதே ஆகும். மதச்சார்பின்மை என்பது உதடுகளால் உச்சரிக்கப்படுகிற வார்த்தை அல்ல. அரசியல் சட்டத்தின் சாராம்சம் என்பதை தமிழக ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.