மேக்னசைட் நிறுவனத்தை மூட சதி? புதிய அரசுக்கு எச்சரிக்கை!
28 May 2026, 11:04 pm

மேக்னசைட் நிறுவனத்தை மூட சதி? புதிய அரசுக்கு எச்சரிக்கை!

சேலம், மே 28- லாபத்தில் இயங்கும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தை, நஷ்டத் திலுள்ள கனிம வள நிறுவனத்துடன் இணைக்க முயன்றால் தொழிலா ளர்களை திரட்டிப் போராட்டம் நடத்தப்படும் என்று தொழிற்சங்கங் களின் கூட்டமைப்பு எச்சரித்துள் ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தை காப்பதற் கான தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் நல்லமுத்து சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறி யதாவது: கடந்த 1979-இல் அரசு டைமையாக்கப்பட்ட தமிழ்நாடு மேக் னசைட் நிறுவனம், தொழிலாளர்க ளின் உழைப்பால் ஆண்டுக்கு ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை லாபகரமாக இயங்கி வந்தது.

நாட் டின் 90 சதவீத மேக்னசைட் சேலத்தில் தான் கிடைக்கிறது.

இத்தகைய சிறப்புமிக்க நிறுவனத்தை, தற்போ தைய நஷ்டத்தில் இயங்கும் தமிழ் நாடு கனிம வள நிறுவனத்துடன் இணைக்க அதிகாரிகள் மூலம் நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு வதாக தெரிகிறது.

இவ்வாறு இணைத்தால் மேக்ன சைட் நிறுவனம் நலிவடைந்து மூடப் படும் அபாயமும், தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து அவர்க ளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி யாகும் சூழலும் ஏற்படும்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு, கனிம வள அதிகாரிக ளின் பேச்சைக் கேட்டு தொழிலாளர் நலனுக்கு எதிராக செயல்படக் கூடாது.

இவ்விவகாரம் தொடர்பாக கனிமவளத்துறை அமைச்சரை சந் திக்க நேரம் கேட்டுள்ளோம்.

புதிய அரசு தொழிலாளர்களின் நலனைக் காக்கும் என நம்புகிறோம். மாறாக, கனிம வள நிறுவனத்துடன் இணைக் கும் முயற்சியைத் தொடர்ந்தால், அனைத்து தொழிலாளர்களையும் ஒன்றிணைத்துப் போராடுவோம், என் றார்.