வாக்கு, வாக்காளர், தேர்தல்களில் ஊழல் ஏற்படும்போது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ்
27 Nov 2025, 3:26 pm
<p><strong>வாக்கு, வாக்காளர், தேர்தல்களில் ஊழல் ஏற்படும்போது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ்</strong></p>
<p>உடுமலை, நவ. 27- உடுமலைப்பேட்டை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் சி. முருகானந்தம் தலைமையில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராம ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்கள் (vote, voter and elections) ஜனநாயகத்தின் அடித்தளங்கள் ஆகும். வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்கள் ஆகியவற்றை குறித்த கல்வியே வாக்காளரி யல் (Voterology) கல்வியாகும் வாக்கு, வாக்காளர், தேர்தல் கள் ஆகிய அம்சங்களில் ஊழல் ஏற்படும்போது ஜனநா யகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்றார். வாக்காளர்களுக்கு விழிப்பு ணர்வு இல்லாதது, ஊழல் மற்றும் சர்வாதிகாரம் ஆகியன ஜனநாயகத்தின் எதி ரிகள் ஆகும். வாக்காளர்களி டையே விழிப்புணர்வை ஏற் படுத்த வாக்காளரியல் (Voterology) கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்வது அவசியமான தாகும். “எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்கள்” (“Voters above all else”) என்பது வாக்காளரிசத்தின் (Voterologism) மையக் கருத்தாகும். வாக்காளரியல் கோட்பாடுகளை பரப்புவதே வாக்காளரிசத்தின் வேலை யாகும். வாக்காளர் விழிப்பு ணர்வு ஊழலை ஒழிக்க அவசியமான ஒன்றாகும். வாக்காளர் உரிமை பாதுகாப்பு ஆணையம் பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் வாக்காளர் பட்டி யல் பணிகளையும் தேர்தல் நடத்துதல், வாக்குகளை எண்ணி முடிவுகளை வெளி யிடுதல் ஆகிய பணிகளை யும் தேர்தல் ஆணையம் செய்கிறது. வாக்காளர்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டால் அதைப் பெற்றுத் தரவும் வாக்காளரியல் (Voterology) கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்லவும் தேசிய அளவிலும் மாநில அள விலும் வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (Comm ission for Protection of Voters Rights) அமைக்கப்பட வேண்டும். ஆறு மாதங் களுக்குள் தேர்தல் வழக்கு களை விசாரித்து முடிக்க சிறப்பு தேர்தல் தீர்ப்பாயங் களும் (Election Tribunals) அமைக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம், வாக்கா ளர் ஆணையம், தேர்தல் தீர்ப்பாயம் ஆகியவற்றை தேர்தல் நிறுவனங்கள் (Elec tion Authorities) என அரசி யலமைப்பில் வகைப்படுத்த வேண்டும். சட்டங்களை இயற்ற நாடாளுமன்றமும் சட்டப்படி ஆட்சியை நடத்த அரசாங்க மும் சட்டத்தில் ஏற்படும் பிரச்ச னைகளை தீர்க்க நீதிமன்றங் களும் இயங்கி வருகின்றன. சட்டம் இயற்றும் அமைப்பு களுக்கும் ஆட்சி நடத்தும் அர சாங்கத்துக்கும் நீதிமன்றங் களுக்கும் இடையே அதி காரப் பிரிவினை (separation of power)) செய்யப்பட்டு ஒவ்வொரு அமைப்பும் சுதந்திரமாக செயல்படும் வகையில் அரசியலமைப்புச் சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு ள்ளன. சட்டம் இயற்றும் அமைப்புகளுக்கும் ஆட்சி நடத்தும் அரசுக்கும் நீதி மன்றங்களுக்கும் வழங்கப் பட்டுள்ளது போன்ற இணை யான அந்தஸ்தை தேர்தல் நிறு வனங்களுக்கு அரசிய லமைப்பு வழங்க வேண்டும். இதன் மூலம் வாக்கு, வாக்கா ளர் மற்றும் தேர்தல்களில் ஏற்படும் ஊழல்களை அகற்றவும் மக்களாட்சியை பாதுகாக்கவும் இயலும். ஊழல் மிகப்பெரிய எதிரி லோக் ஆயுக்தா என்ப தற்கும் லோக் அதாலத் என்ப தற்கும் உள்ள வேறுபாடு பெரும்பாலானோருக்கு தெரி வதில்லை. லோக் ஆயுக்தா என்றால் ஊழலுக்கு எதிரான மாநில அளவிலான உயர் விசாரணை அமைப்பாகும். அனைத்து நீதிமன்றங்களி லும் வழக்குகளை சமரச பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளும் வழிமுறைக்கான அமைப்பு லோக் அதாலத் ஆகும். இந்த வேறுபாட்டை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று ராமராஜ் கேட்டுக்கொண்டார். நல்லாட்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் ஊழல் மிகப்பெரிய எதிரியாகும். பிரதமர், மத்திய அமைச்சர் கள், மத்திய அரசின் அனைத்து அலுவலர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு களை விசாரிக்க லோக்பால் அமைக்கப்பட்டுள்ளது. இதைப்போலவே முத லமைச்சர், அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட மாநில அரசின் அலுவலர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசா ரிக்க தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைக்கப் பட்டுள்ளது. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரிக்க வழக்கறிஞர்கள் சங்கங்களும் தன்னார்வ அமைப்புகளும் பாடுபட வேண்டும் என்று வீ. ராமராஜ் வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக உடுமலைப் பேட்டை வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் ஏ.சிவ குமார் வரவேற்புரை ஆற்றி னார்.</p>
