தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நவம்பர் 1 – உள்ளாட்சி தினம் கிராமப்புற உள்ளாட்சியை முடக்காதீர்கள்! - அ.பழநிசாமி

31 Oct 2026, 9:14 pm
நவம்பர் 1 – உள்ளாட்சி தினம் கிராமப்புற உள்ளாட்சியை முடக்காதீர்கள்! - அ.பழநிசாமி

நவம்பர் 1 – உள்ளாட்சி தினம் கிராமப்புற உள்ளாட்சியை முடக்காதீர்கள்! - அ.பழநிசாமி

உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள், சாதனைகள், அரசுத் திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாட்டில் நவம்பர் 1 உள்ளாட்சி தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2007 நவம்பர் 1 முதல் கடைப்பிடிக்கப்பட்ட இந்நாள், சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 2022 முதல் தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது. இதையொட்டி மாநிலத்தின் 12,482 ஊராட்சிகளிலும் சிறப்புக் கிராம சபைக் கூட்டங்களை நடத்த அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

கிராம சபை: மக்களின் நேரடி மன்றம்

ஊராட்சியின் வரவு–செலவு, நிதிப் பயன்பாடு, நலத்திட்டங்கள், பயனாளிகள் தேர்வு, வளர்ச்சிப் பணிகள், குடிநீர், சுகாதாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், டெங்கு தடுப்பு, மழைக்கால முன்னெச்சரிக்கை, குழந்தைத் தொழிலாளர் தடுப்பு, வரி வசூல், தொடக்கப் பள்ளி நிர்வாகம் என ஏராளமான பணிகள் உள்ளாட்சி அமைப்புகள் வழியாகவே நடைபெறுகின்றன. இவற்றை ஒழுங்குபடுத்தவும், மக்களின் நேரடிப் பங்களிப்பையும் வெளிப்படையான நிர்வாகத்தையும் உறுதிசெய்யவும், பயனாளிகள் தேர்வைச் சீர்செய்யவும் கிராம சபைகளின் பங்கு மகத்தானது.

உள்ளூர்ப் பிரச்சனைகளையும் திட்டங்களையும் கிராம சபையில் விவாதித்துத்

தீர்வு காணும் வாய்ப்பு மக்களுக்கு உண்டு.சேர, சோழ, பாண்டியர் காலத்திலிருந்தே உள்ளாட்சி மரபு தமிழ் மண்ணில் தொடர்கிறது. கிராமப்புற மக்களுக்காக நேரடியாக இயங்கும்

உள்ளாட்சித் துறைக்கு விழா எடுப்பது மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால் விழாவின் வெளிச்சத்துக்குப் பின்னால் உள்ள நிலைமை என்ன?

நிதிச் சுமையில் தவிக்கும் ஊராட்சிகள்

குடிநீர், தெருவிளக்கு, கழிப்பறை, சாலை, வடிகால், கழிவுநீர்க் கால்வாய் போன்ற அத்தியா

வசியப் பணிகளைக்கூடச் செய்துதர முடியாமல் இன்று கிராம ஊராட்சிகள் திணறுகின்றன. வளர்ச்சிப் பணிகள் முதல் அலுவலர்கள், கடைநிலை ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்களின்

ஊதியம் வரை அனைத்துக்கும் ஒன்றிய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டையே ஊராட்சிகள் சார்ந்திருக்கின்றன.

ஒன்றிய நிதிக்குழு அறிக்கையின்படி, 2021-22 முதல் 2025-26 வரை

யிலான ஐந்தாண்டுகளில் ஒன்றிய அரசு தனது மொத்தவருவாயில் அதிகபட்சம் 1.89 சதவீதத்தையே ஒதுக்கியுள்ளது. நாடு முழுவதும் கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட ₹2,36,805 கோடியில் தமிழ்நாட்டின் பங்கு ₹14,059 கோடி. அதிலும் நடப்பு

நிதியாண்டுக்கான ₹2,246.07 கோடியை விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) தரவுகளின்படி, ஐந்தாண்டுகளில் ஒன்றிய

அரசு தமிழகத்துக்குச் செய்த ஒதுக்கீடு சராசரியாக 1.78 சதவீதம் (சுமார் ₹8,400 கோடி) மட்டுமே.

5.1 சதவீதம் எங்கே?

மாநிலத்தின் நிகர சொந்த வரி வருவாயில் 10 சதவீதத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும்; அதில் 51 சதவீதம் ஊரக உள்ளாட்சிகளுக்குச் செல்ல வேண்டும் என்று தமிழ்நாட்டின் ஆறாவது மாநில நிதிக்குழு பரிந்துரைத்தது. அதாவது, கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு 5.1 சதவீதம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் சிஏஜி தரவுகள் சொல்வது வேறு:

மாநில அரசு கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு ஒதுக்கிய நிதி (₹ கோடி)

ஆதாரம்: இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG)

அதிகபட்சமாக 2023-24இல்கூட 2.49 சதவீதம்தான்; ஐந்தாண்டுச் சராசரி 2.36 சதவீதம். பரிந்துரைத்ததில் பாதிகூட இல்லை. தூய்மைப் பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குநர்கள், கடைநிலை ஊழியர்களுக்குக்கூட ஊதியம் தர முடியாத நிலை நீடிக்கிறது. தெருவிளக்கு, சாலையோரம் உடைந்து நீர் வீணாகும் குழாய் என்று சின்னச் சின்ன வேலைகளைக்கூடச் செய்ய முடியாமல் நித்தமும் திணறும் நிர்வாகமாக உள்ளாட்சிகள் மாறிவிட்டன.

ஒன்றிய, மாநில அரசுகள் தங்கள் சொந்த வருவாயில் 30 சதவீதத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் தொடர்ந்து கோரி வருகின்றன. மக்களின் தேவைக்கும் அரசின் ஒதுக்கீட்டுக்கும் இடையே மலையளவு இடைவெளி நீடிப்பது பெரும் கவலை தருகிறது.

தேர்தல் இல்லாத உள்ளாட்சி

28 மாவட்டங்களில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2025 ஜனவரி 5 அன்று நிறைவடைந்தது. அன்றிலிருந்து இன்றுவரை, ஏறத்தாழ இரண்டாண்டுகளாகத் தேர்தல் நடத்தப்படவில்லை. மக்கள் பிரதிநிதிகள் இல்லாத உள்ளாட்சிகள் அதிகாரிகளின் வேட்டைக்காடாக மாறியுள்ளன. மக்களின் கருத்தறிந்து, வெளிப்படைத் தன்மையோடு அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் ஜனநாயகப் பொறுப்பை முந்தைய அரசும், தற்போதைய தவெக அரசும் நிராகரித்து வருகின்றன. இதனால் கீழ்க்கண்ட மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடு தடுக்கப்பட்டு, மக்களின் பங்கேற்பும் முடக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்

‘மாற்றம் தருவோம்’ என்று ஆட்சிக்கு வந்த அரசு, தேர்தலை நடத்தாமல் தனி அலுவலர்களை நியமித்து ஆணை வெளியிட்டிருப்பது, உள்ளாட்சி அமைப்புகளையும் மக்கள் பங்கேற்பையும் முற்றிலும் முடக்குவதாகும்.

விழா மட்டும் போதாது

உள்ளாட்சிக்கு விழா எடுப்பதால் மட்டும் தீர்வு கிடைத்துவிடாது. உள்ளாட்சி தினத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாகச் செய்ய வேண்டியவை:

• உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.

• மாநிலத்தின் சொந்த வருவாயில் 30 சதவீதத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்க வேண்டும்; ஒன்றிய அரசும் நிறுத்தி வைத்துள்ள நிதி உட்பட உரிய நிதியை உரிய காலத்தில் விடுவிக்க வேண்டும்.

• தனி அலுவலர்களின் ஊழலுக்கும் லஞ்சத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

• ஒப்பந்ததாரர்களின் வேட்டைக்காடாக மாறியுள்ள உள்ளாட்சிகளைப் பாதுகாக்க வேண்டும்.

• மக்கள் பங்கேற்புடன் வெளிப்படையான, ஜனநாயகப்பூர்வமான நிர்வாகத்தை உத்தரவாதப்படுத்த வேண்டும். இவற்றை உரத்து வலியுறுத்துவோம்!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.