உள்ளாட்சி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றி ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்பதாக அரசு உறுதி
10 Oct 2026, 12:13 am

உள்ளாட்சி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றி ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்பதாக அரசு உறுதி

சென்னை, அக்.9 -மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சம்மேளனம் (சிஐடியு) நடத்திய தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு முக்கிய வெற்றி கிடைத்துள்ளது. பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) பிடித்தத்தில் உள்ளமுறைகேடுகளைக் களைதல், சட்டப்படியான போனஸ், காலை உணவுக்குப் பதிலாக ரூ. 100 உணவுப்படி உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக இப்போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தின் கட்டங்கள்கடந்த ஜூலை 21 அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அடுத்த கட்டமாக, அக்டோபர் 1 அன்று முதல்வருக்கு, ஆணையாளர்/செயல் அலுவலர் மூலம்தனித்தனிக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து அக்டோபர் 5 முதல் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மதுரை, திருப்பூர், நெல்லை, புதுக்கோட்டை, சிவ

காசி, தாம்பரம் உள்ளிட்ட மாநகராட்சிகள், திருப்பூர், விருதுநகர், திருச்சி, கோவை, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ஊட்டி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு நகராட்சிகள், பேரூராட்சிகளில் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு சிஐடியு தமிழ்நாடு மாநிலக் குழு அறிக்கைவெளியிட்டு வலியுறுத்தியது.

பேச்சுவார்த்தை; உறுதிமொழிஇதையடுத்து, அக்.8 அன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நிர்வாக இயக்குநர் மதுசூதன ரெட்டி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சிஐடியு மாநில உதவித் தலைவர் ஏ. கிருஷ்ணமூர்த்தி, சம்மேளனப் பொதுச் செயலாளர் ஆர். பாலசுப்பிரமணியன், பொருளாளர் கே. ரங்கராஜன், நிர்வாகிகள் எம். பன்னீர்செல்வம், பி. சீனிவாசலு, ஜி. முனுசாமி, டி. ராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். பணி நிரந்தரக் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாகவும், குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதம், பிஎப் முறைகேடு களைதல், சட்டப்படியான போனஸ், டெண்டர்/ஒப்பந்த முறை மாற்றம்,உணவுப்படி, மருத்துவக் காப்பீடு, அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, இணைக்கப்பட்ட பகுதி ஊழியர்களைக் காலமுறை ஊழியர்களாக்குதல் ஆகிய கோரிக்கைகளை ஏற்றும் அரசு நிர்வாகம் உறுதியளித்துள்ளது.இப்போராட்டத்தின் விளைவாக, குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்கப்படாமலிருந்த உள்ளாட்சி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, முறையான ஊதிய ரசீது, பிஎப் பிடித்தம், இஎஸ்ஐ மருத்துவ வசதி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. போராட்டத்துக்குத் தீர்வு ஏற்பட தலையிட்ட சிஐடியு தமிழ்நாடு மாநிலக் குழுவுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சிக்கும் சம்மேளனம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.