அக்.5 மாநகராட்சி, நகராட்சிகளில் வேலை நிறுத்தம் சிஐடியு உள்ளாட்சி ஊழியர்கள் முதல்வருக்கு கடிதம்
1 hour before

அக்.5 மாநகராட்சி, நகராட்சிகளில் வேலை நிறுத்தம் சிஐடியு உள்ளாட்சி ஊழியர்கள் முதல்வருக்கு கடிதம்

திருப்பூர், அக்.2- அக்டோபர் 5ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் வேலை செய்யும் உள்ளாட்சி ஊழியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.

இதன்தொடர்சியாக, சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறைஊழியர் சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சிகளின் ஆணையர்கள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்அலுவலர்களிடம் வியாழனன்றுகடிதம் வழங்கினர்.

திருப்பூர் மாநகராட்சி மற்றும் 6 நகராட்சிகளில் ஒப்பந்த தூய்மை பணியாளர் உள்ளிட்டவர்களின் கடிதங்கள் ஆணையாளர்கள் வழியாக தமிழக முதல்வருக்கு ஒப்படைக்கப்பட்டது. தமிழக அரசு, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், தூய்மைப் பணி உள்ளிட்ட உள்ளாட்சி பணிகளில் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும்.

அரசாணை 2 (டி) படி, குறைந்தபட்சஊதியம், சம்பள ரசீது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இ.பி.எப்.பிடித்தங்களில் முறைகேடுகளை களைவதுடன், பேரூராட்சிகளில் இபிஎப், மற்றும் இஎஸ்ஐ பிடித்தம் செய்ய வேண்டும், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், காலை உணவுக்கு பதிலாக, உணவுப்படியாக ரூ.100 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் மற்றும் சிஐடியு சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆணையர்களிடம் கடிதங்களை வழங்கினர்.

கோவை

இதேபோன்று கோவையிலும் மாநகராட்சி ஆணையாளர்கள், நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்களிடம் நேரில் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ரத்தினகுமார், தலைவர் ராஜா கனி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.