தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜூலை 21-இல் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!

4 Jul 2026, 9:24 pm
ஜூலை 21-இல் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!
<p><strong>ஜூலை 21-இல் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!</strong> </p><p>நகர்ப்புற உள்ளாட்சி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு திருப்பூர், ஜூலை 4 - உள்ளாட்சி நிர்வாகங்களில் தனியார்மயத்தை புகுத்துவதற் கான, கடந்த ஆட்சிக்கால அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும், ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஜூலை 21 அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெறும் என நகர்ப்புற உள்ளாட்சி ஊழியர்கள் சங்கம் அறி வித்துள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) மாநிலக்குழு கூட்டம், திருப்பூ ரில் தியாகி பழனிச்சாமி நிலையத்தில் சனிக்கிழமை நடை பெற்றது. சம்மேளனத்தின் மாநிலத் துணைத்தலைவர் முகமது அலி ஜின்னா தலைமை வகித்தார். சிஐடியு மாநிலத் தலை வர் ஜி. சுகுமாரன், சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் பால சுப்பிரமணியம், மாநிலப் பொருளாளர் கே. ரங்கராஜ் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கடந்த ஆட்சிக் காலத்தில், உள்ளாட்சிகளில் கொண்டு வரப்பட்ட தனியார்மய சட்டங்களான அரசாணை 152 மற்றும் 139 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்; 5 ஆண்டு களுக்கு மேல் பணிபுரிந்த, தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; தமிழ்நாடு அரசின் குறைந்தபட்ச ஊதிய சட்டமான அரசாணை 2 (டி) 62-ன் படி ஊதியம் நிர்ணயித்து வழங்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜூலை 21 அன்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய வற்றில் பணியாற்றும் உள்ளாட்சி ஊழியர்களை இணைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.