தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உள்ளாட்சித்துறை ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம்! பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண தமிழக அரசுக்கு சிஐடியு வேண்டுகோள்

5 Oct 2026, 11:11 pm
உள்ளாட்சித்துறை ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம்! பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண தமிழக அரசுக்கு சிஐடியு வேண்டுகோள்

உள்ளாட்சித்துறை ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம்! பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண தமிழக அரசுக்கு சிஐடியு வேண்டுகோள்

சென்னை, அக். 5 -உள்ளாட்சித்துறை ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத் தைத் துவங்கியுள்ள நிலையில், போராடும்தொழிற்சங்கத்துடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண முன்வர வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக, சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். கண்ணன் அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர்கூறியிருப்பதாவது:

தனியார்மய அரசாணைகளை திரும்பப் பெற வேண்டும்!

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த முறையில் தூய்மைப்பணி, சுகாதாரப்பணி, குடிநீர் வழங்கல், பிளம்பர், பிட்டர், எலக்ட்ரிஷன், அம்மா உணவகம், டெங்கு கொசு ஒழிப்பு, கணினி இயக்குதல் என பல்வேறு பிரிவுகளில் தொடர்ச்சியாக பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், 2020-ல் முந்தைய அரசு உள்ளாட்சிஅமைப்புகளில் தனியார் மயப்படுத்தும் எண். 152, 139 மற்றும் 10 ஆகிய அரசாணைகளை திரும்ப பெற வேண்டும்.

அனைத்துப் பிரிவினருக்கும் குறைந்தபட்ச ஊதியம்!

2017-ஆம் ஆண்டு நகர்புற உள்ளாட்சி ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும், நகர்புற உள்ளாட்சி ஊழியர்களுக்குகாலை உணவுக்கு பதிலாக உணவுத் தொகையாக ரூ. 100 வழங்கப்பட வேணடும். நகர்ப்புற உள்ளாட்சி ஊழியர் களுக்கும் குறைந்தபட்ச போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சம்மேனம் (சிஐடியு) சார்பில் மாநிலந் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் துவங்கியுள்ளது.

15 ஆயிரம் பேர் வேலைநிறுத்தம்!

மதுரை, திருப்பூர். சிவகாசி. திருநெல்வேலி, தாம்பரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாநகராட்சிகளிலும், திருக்கோவிலுர், உளுந்தூர்பேட்டை, விருதுநகர்உள்ளிட்ட நகராட்சிப் பகுதிகளிலும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சித்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினரை அழைத்துப் பேசி கோரிக்கைகளுக்கு தீர்வு காணமுன்வர வேண்டுமென, தமிழக அரசை சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போராட்டம் தீவிரமாகும்உள்ளாட்சி ஊழியர் சம்மேளனம் எச்சரிக்கை!

உள்ளாட்சித்துறை ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எதையும் தமிழக அரசுஎடுக்கவில்லை என்பதால், செவ்வாய்க்கிழமை முதல் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வேலைநிறுத்தப் போராட்டம்மேலும் தீவிரமாகும் என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆர். பாலசுப்பிரமணியன்எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றுக் காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு கொரோனாகால ஊக்கத் தொகையாக ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும்; 2026-2027ஆம் ஆண்டிற்கு 8.33 சதவிகிதம் போனஸ் வழங்கவேண்டும்; ஒப்பந்தத் தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்டு வரும் வருங்கால வைப்பு நிதித் தொகைதொழிலாளர்களுக்கு முழுமையாக கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அரசை வலியுறுத்தியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.