தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உள்ளாட்சி அமைப்புகளின் தன்னாட்சியும் அதிகார உரிமைகளும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுகோள்! - தி.நாகராஜன்

yesterday
உள்ளாட்சி அமைப்புகளின் தன்னாட்சியும் அதிகார உரிமைகளும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுகோள்!  - தி.நாகராஜன்

உள்ளாட்சி அமைப்புகளின் தன்னாட்சியும் அதிகார உரிமைகளும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுகோள்! - தி.நாகராஜன்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 73 மற்றும் 74-வது திருத்தங்கள் நாட்டின் அடிமட்ட ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டன. ஆனால், நடைமுறையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உறுதி செய்யப்பட்ட உரிமைகளும் அதிகாரங்களும் பல்வேறு வடிவங்களில் சீர்குலைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தன்னாட்சியை முழுமையாகப் பாதுகாத்து, அவற்றை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதிகார பகிர்வும் நிதி ஒதுக்கீடும்

அதிகாரங்களை மாநில அளவில் மையப்படுத்தாமல், உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பகிர்ந்தளிப்பதே நிர்வாகத்தின் வெற்றியாகும். அதற்கேற்ப, கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு 29 வகையான அதிகாரங்களும், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு 18 வகையான அதிகாரங்களும் முழுமையாக வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, கிராம ஊராட்சிகள் தங்களது ஊரில் ரூ. 10 லட்சம் வரையிலான பணிகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் பெற வேண்டும். மேலும், மத்திய-மாநில நிதிகள் மற்றும் ஆணைய நிதிகள் எவ்விதத் தடையுமின்றி நேரடியாக உள்ளாட்சிகளுக்கு விடுவிக்கப்பட வேண்டும். உள்ளாட்சிகளுக்கான மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டை 10 சதவிகிதத்தில் இருந்து 30 சதவிகிதமாக உயர்த்த வேண்டும். உள்ளாட்சிப் பணிகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பது கடுமையான நிதி நெருக்கடியை உருவாக்குவதால், அவற்றுக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் வருடம்தோறும் 6% சொத்து வரி உயர்த்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் நிபந்தனைகளுக்கு உட்படாமல் இந்த சொத்து வரி உயர்வையும், வருடத்திற்கு 6% உயர்வு என்ற அரசாணை எண்: 53-ஐயும் தமிழக அரசு ரத்து செய்திட வேண்டும்.

மக்கள் பங்கேற்பும் பிரதிநிதித்துவச் சீர்திருத்தங்களும்

கிராம சபை மற்றும் வார்டு சபை கூட்டங்களை மக்களின் குழு பங்களிப்புடன் தொடர்ந்து நடத்தி, அங்கு எடுக்கப்படும் முடிவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தாலும், களத்தில் பெண் பிரதிநிதிகளின் செயல்பாடு குடும்பத்தில் உள்ள ஆண்களாலோ அல்லது அரசியல் கட்சியின் ஆண்களாலோ முடக்கப்படும் போக்கு நிலவுகிறது. அதேபோல், பட்டியல் இன பிரதிநிதிகளின் அதிகாரமும் ஆதிக்க சக்திகளால் ஒடுக்கப்படுகிறது. இவற்றைத் தடுத்து அவர்களின் தன்னாட்சியைப் பாதுகாக்க அரசு உரிய கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை மற்றும் தனியார்மய எதிர்ப்பு

தமிழ்நாட்டில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் எங்குமே சரியான திட்டமிடல் இல்லாமல் தத்தளிக்கின்றன. குப்பைகளைப் பிரித்து வாங்குவதோடு, அவற்றை மறுசுழற்சி செய்து எரிவாயு மற்றும் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களை மாநிலம் முழுவதும் ஊக்குவிக்க வேண்டும்; இதற்குப் பொதுமக்களின் விழிப்புணர்வும் ஒத்துழைப்பும் அவசியமாகும். இதனிடையே, உள்ளாட்சி அமைப்புகளின் வருமானம் தரும் திட்டங்களை தனியாரிடம் ஒப்படைப்பது தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பாக, சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை 25 ஆண்டுகளுக்கு சூயஸ் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்திற்குத் தாரைவார்ப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பேரிடர் காலங்களில் தனியார் நிறுவனங்கள் பொறுப்பேற்காமல் ஓடிவிடும் அபாயம் உள்ளதை அரசு உணர வேண்டும்.

தொழிலாளர் நலனும் தூய்மைப் பணியும்

உள்ளாட்சிப் பணிகளில் ஒப்பந்த முறையைக் கைவிட்டு, துப்புரவு மற்றும் பாதாள சாக்கடைப் பணியாளர்களுக்கு நிரந்தரப் பணியும் தொழிலாளர் உரிமைகளும் உறுதி செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டின் 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைத் தனியார் வசம் ஒப்படைக்க (PPP முறை) கொண்டுவரப்பட்ட டெண்டர்கள் கடுமையான எதிர்ப்புகள் காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். மேலும், வரி வசூல், வாடகை வசூல், ஏலம் விடுதல் மற்றும் கடை அனுமதி போன்ற சேவைகள் 100% ஆன்லைனில் வெளிப்படையாகவும் எளிமையாகவும் மாற்றப்பட வேண்டும்.

அடிப்படை வசதிகள்: சுகாதாரம், கல்வி மற்றும் சுகாதாரம் சார்ந்த கோரிக்கைகள்

பாதாள சாக்கடைப் பணிகளில் நிரந்தர ஊழியர்களை நியமிப்பதோடு, நவீன இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப பாதாள சாக்கடை அமைப்புகளை விரிவுபடுத்துவதுடன், பம்பிங் நிலையங்கள் தடையின்றி இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தர மருத்துவர்கள், செவிலியர்களை நியமித்து, எக்ஸ்ரே, ஸ்கேன் மற்றும் ஆய்வக வசதிகளை உயர்த்துவதோடு நகர்ப்புறங்களில் அவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

உள்ளாட்சிப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்; வகுப்பறைகள், விளையாட்டுத் திடல்கள் மற்றும் குடிநீர், கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மாணவர் வருகை குறைவாக உள்ளது என்ற காரணத்தைக் கூறி பள்ளிகளை மூடாமல், அவற்றைத் தரம் உயர்த்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை உத்தரவு வழங்கும் அதிகாரத்தை ஊராட்சிகளிடமே வழங்க வேண்டும்; இத்திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கான 2014-ஆம் ஆண்டு சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி, அடையாள அட்டை மற்றும் விற்பனைக் குழு தேர்தலை நடத்திட வேண்டும்; வியாபாரிகளை இடமாற்றம் செய்யும்போது குறைந்தது 30 நாட்களுக்கு முன்பு முன் அறிவிப்பு வழங்கப்பட வேண்டும். மேலும், புலம்பெயர் தொழிலாளர்களின் கணக்கெடுப்புடன் அவர்களுக்குக் குறைந்தபட்ச கூலிச் சட்டம் உறுதி செய்யப்பட வேண்டும்.

பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை முறையான இடங்களில் அமைத்துப் பராமரிப்பதோடு, பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் புதிய மயானங்களை அமைத்து, ஏற்கனவே உள்ள மயானங்களைச் சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இத்தகைய அடிப்படைச் சிக்கல்கள் மண்டிக்கிடக்கின்றன. இவற்றை உடனடியாகச் சரிசெய்து, தமிழ்நாடு அரசு அரசியலமைப்புச் சட்டத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளின் தன்னாட்சி அதிகாரத்தை முழுமையாக அங்கீகரித்துச் செயல்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.