தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு ஆய்வு

5 Feb 2026, 3:40 pm
மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு ஆய்வு
<p><strong>மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு ஆய்வு</strong></p> <p>மதுரை, பிப்.5- தமிழ்நாடு சட்டமன்ற 2024&ndash;2026 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டுக் குழு தலைவர் மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற &nbsp;உறுப்பினர் எஸ்.காந்திராஜன் தலைமையில், மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு அரசு துறை திட்டப்பணிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன. அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் வீரவசந்தராயர் மண்டபத்தில் ரூ.1,810 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை குழு வினர் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து, கூட்டுறவுத்துறை சார்பில் பாண்டி யன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலையின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில், அழகப்பன் நகரில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப் பட்டு செயல்பட்டு வரும் செக்கு எண்ணெய் உற்பத்தி ஆலை &nbsp;பார்வையிடப்பட்டது. நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.190 கோடி மதிப்பீட்டில் &nbsp;கோரிப்பாளையம் சந்திப்பில் 2,100 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளும் ஆய்வு செய்யப் &nbsp;பட்டன. மதுரை வடக்கு வட்டம் மஸ்தான்பட்டி பகுதியில், மாநக ராட்சி எல்லைக்கு உட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு வைகை &nbsp;பகுதிகளில் கழிவு நீர் மேலாண்மையை மேம்படுத்தும் நோக் &nbsp;கில் செயல்படுத்தப்பட உள்ள கழிவு நீரேற்று நிலையம் கட்டு மானப் பணிகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் &nbsp;துறை சார்பில் ஒத்தக்கடை அரசு சமூகநீதி பள்ளி மாணவர் &nbsp;விடுதியில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சமையல் &nbsp;அறையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் &nbsp;நலத்துறை மற்றும் கள்ளர் சீரமைப்பு சமூகநீதி விடுதிகள் &nbsp;உள்ளிட்ட மொத்தம் 28 விடுதிகளில் தங்கி பயிலும் 512 மாணவ, &nbsp;மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் &nbsp;அடிப்படை வசதிகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறி யப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சட்ட மன்ற மதிப்பீட்டுக் குழு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுகளின்போது மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் &nbsp;மற்றும் சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் இராம.கருமாணிக்கம் (திருவாடானை), சதன் திருமலைக்குமார் (வாசுதேவநல்லூர்), செல்லூர் கே.ராஜு (மதுரை மேற்கு), &nbsp;ராஜா (சங்கரன்கோவில்) ஆகியோர் உடன் இருந்தனர். புகையிலை விற்பனை: &nbsp;ஒருவர் மீது வழக்கு திருவில்லிபுத்தூர், பிப்.5- திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே சார்பு ஆய்வா ளர் மாணிக்கம் வாகன தணிக்கை செய்தார். அப்போது அருப்புக்கோட்டை வட்டம் பந்தல்குடி அருகே வெள்ளை யாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் வாக னத்தை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகை யிலைப் பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொருட்களை கைப்பற்றி, விக்னேஷ் &nbsp;மீது வழக்கு பதியப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.