இணைந்து முன்னேறுவோம்! இணைத்துப் போராடுவோம்! இடதுசாரிக் கட்சிகளின் கூட்டு அறைகூவல்!
11 Nov 2026, 8:40 pm

இணைந்து முன்னேறுவோம்! இணைத்துப் போராடுவோம்! இடதுசாரிக் கட்சிகளின் கூட்டு அறைகூவல்!

தமிழ்நாட்டில் சிபிஐ, சிபிஐ(எம்), சிபிஐ(எம்-எல்) லிபரேசன் ஆகிய கட்சிகளின் கூட்டுச் செயல்பாட்டுக்காக இடதுசாரி ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப் பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுத் தேவை யாகும். தமிழ்நாடு எதிர்கொண்டு வரும் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு சவால்களை எதிர்கொள்ள இந்த முன்னெடுப்பு களத்தின், காலத்தின் தேவையாக உள்ளது.

இன்றைய தமிழகச் சூழலில் இடதுசாரி இயக்கங்களின் ஒருங்கிணைந்த செயல்பாடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. விடுதலைக்குப் பிறகு தமிழ்நாட்டில் இடதுசாரிகளே பிரதான எதிர்க்கட்சியாக இருந்தனர். சட்டமன்றத்தில் பலம் உயர்ந்தாலும், குறைந்தாலும், உழைக்கும் மக்கள் நலனைப் பாதுகாப்பதில் போராட்ட வீரியம்சற்றும் குறையாமல் இடதுசாரிகள் இடையறாது செயல்பட்டு வந்துள்ளனர்.

மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கைகள் ஏற்படுத்திய கடும் பாதிப்புகளும், மாற்றம் தேவை என்ற மக்கள் மனநிலையும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள தமிழகச் சூழலில், இடதுசாரி மாற்றுக்கான தேவை தற்போது அதிகரித்துள்ளது.

மக்கள் நலன் காப்பதில் இடதுசாரிகள்

உலகம் முழுவதும் உள்ள பாட்டாளி வர்க்கத்தின் உரிமைப் போராட்டங்களை ஆதரித்து ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் தமிழகத்தில் இடதுசாரிக் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. உலக உழைக்கும் மக்களின் உழைப்பைச் சுரண்டுகிற ஏகாதி பத்தியத்தை எதிர்த்து அயர்வின்றி களம் காணும் முன்னணிப் படையாகத் தமிழ்நாட்டின் பாட்டாளி வர்க்க இயக்கம் செயல்பட்டு வருகிறது.அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள், சர்வதேச சட்டங்களை மீறி, நாடுகளின் இறையாண்மையைப் பறிக்கும் ஆக்கிரமிப்புப் போர்களைப் பாலஸ்தீனம், ஈரான் என உலகின் பல நாடுகளில் தொடுத்து வருகின்றன.

நவதாராளமயக் கொள்கைகள் வழியாகப் பல நாடுகளின் பொருளாதாரத்தைச் சூறையாடு வது, கார்ப்பரேட் மூலதனக் குவியலுக்காக ஏழை நாடுகளின் வாழ்வாதாரங்களை அழிப்பது, உலகின் சுற்றுச்சூழலுக்குப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவது போன்ற அனைத்தையும் எதிர்த்தும், சோசலிச இலட்சி யத்திற்காகவும் இடதுசாரிக் கட்சிகள் தமிழகப் பாட்டாளி வர்க்கத்தை அணிதிரட்டி வந்துள்ளன.

இடதுசாரிகளின் வர்க்கப் போராட்டக் களமாக தமிழ்நாடு!

விடுதலைப் போராட்டக் காலத்தில் இந்தியாவை அடிமைப்படுத்தியிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மாபெரும் போராட்டங்களைத் தமிழகத் தொழிலாளி வர்க்கம் முன்னெடுத்தது. தமிழகத்தில் கம்யூனிச இயக்கம் வேரூன்றுவதில் பெரும்பங்காற்றிய சிந்தனைச் சிற்பி தோழர் சிங்காரவேலர், ஏகாதிபத்திய எதிர்ப்புக் கனலை மக்கள் உணர்வாக மாற்றி விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த வ. உ. சிதம்பர னார் உள்ளிட்ட மகத்தான தலைவர்களின் அயராத உழைப்பினாலும் தியாகத்தினாலும் தமிழகத்தின் விடுதலைப் போராட்ட இயக்கமும், உழைக்கும் வர்க்க மக்கள் இயக்கங்களும் வளர்ச்சி பெற்றன.

இந்தியாவில் உழைக்கும் வர்க்கப் போராட்டத்தின் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு ஆகும். 1918-இல் சென்னை தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முதலாகச் சென்னைக் கடற்கரையில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மே தினத்தைக் கொண்டாடிய பெருமையும் தமிழ்நாட்டிற்கு உண்டு. வேலை நேரம் குறைப்பு, ஊதிய உயர்வு கோரிக்கைகளுக்காகச் சென்னை பக்கிங்காம் - கர்னாட்டிக் ஆலைத் தொழிலாளர்கள், பொன்மலை ரயில்வே தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடந்தன. விவசாயிகளின் நிலம் மற்றும் ஊதிய உரிமைகளுக்கான போராட்டங்கள் வீறுகொண்டு எழுந்தன.

தொழிலாளர்களுக்கான 8 மணி நேர வேலை, சங்கம் அமைக்கும் உரிமை ஆகியவற்றை வென்றெடுத்த வரலாற்றுப் பெருமை செங்கொடி இயக்கத்தையே சாரும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், நிலப்பிரபுத்துவ அடக்குமுறைகளுக்கு எதிராகவும் கம்யூனிஸ்டுகள் சமரசமின்றிச் சமர் செய்தனர். இதன் காரணமாகச் சதி வழக்குகள் புனையப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டது. சிறைவாசம், கொடூர சித்ர வதைகள், துப்பாக்கிச் சூடுகள், தூக்குமேடைகள் எனச் சொல்லொணாக் கொடுமைகளைக் கம்யூனிஸ்டுகள் தீரமுடன் எதிர்கொண்டனர்.

கோவை சின்னியம்பாளையம் பஞ்சாலைத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுத்து, பிரிட்டிஷ் அடக்குமுறையை எதிர்கொண்டு தூக்கு மேடையேறிய நான்கு தொழிலாளர்களின் தியாகம், சேலம் மத்திய சிறையில் கம்யூனிஸ்டுகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் 22 கம்யூனிஸ்டுகள் படுகொலை உள்ளிட்ட எண்ணற்ற தியாகங்கள் கொண்டதாகத் தமிழகத்தின் கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு அமைந்துள்ளது.

சவுக்கடி, சாணிப்பால் கொடுமைகளை எதிர்த்துப் போராடி முறியடித்த வரலாற்றைக் காவிரிப் படுகையில் கம்யூனிஸ்ட் இயக்கம் சாதித்துள்ளது. கீழ்வெண்மணியில் 44 விவசாயத் தொழிலாளர்கள் கூலி உயர்வுப் போராட்டத்தில் உயிருடன் எரிக்கப்பட்டதானது மகத்தான தியாக வரலாறாக அமைந்துள்ளது.

அடக்குமுறைகளும், சிறைப்படுகொலை களும், துப்பாக்கிக் குண்டுகளும் கம்யூனிச இயக்கத்தை ஒருபோதும் முடக்கிவிடவில்லை. மாறாக, அவை தமிழ் மண்ணில் வர்க்கப் போராட்டக் கனலை மேலும் மேலும் சுடர்விடச் செய்தன. பிரம்மாண்டமான மக்கள் திரள் இயக்கங்கள் இடதுசாரிகளுக்கான வலுவான அடித்தளத்தைத் தமிழகத்தில் உருவாக்கின.

சமரசமற்ற போராட்டங்களால் சட்டப் பாதுகாப்பு

இன்று தமிழக உழைக்கும் வர்க்கமும், ஒடுக்கப்பட்ட விவசாய உழுகுடிகளும் பெற்றி ருக்கும் நிலப் பாதுகாப்பு, கூலி உயர்வு, குடி யிருப்போர் உரிமைச் சட்டங்கள் அனைத்தும் இடதுசாரிகள் சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடத்திய சமரசமற்ற வர்க்கப் போராட்டங்களின் மூலமே சாத்தி யமாகின.

“உழுபவருக்கே நிலம் சொந்தம்” என்ற முழக்கத்துடன், உபரி நிலங்களை மீட்டு நிலமற்ற ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று இடதுசாரிகள் நடத்திய மகத்தான நில மீட்புப் போராட்டங்களின் அழுத்தத்தால் நில உச்சவரம்பு நிர்ணயச் சட்டம் மற்றும் குத்தகைதாரர்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டன.

இந்தச் சட்டங்கள் தமிழகத்தின் அடித்தட்டு விவசாய மற்றும் உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்வில் மிகப்பெரிய பொருளாதார, சமூக மாற்றங்களை உருவாக்கின. உழைப்ப வர்களின் உரிமைகளுக்குச் சட்டரீதியான பாதுகாப்பு அரணை உருவாக்கியது செங்கொடி இயக்கமே ஆகும்.

நிலம், தொழிலாளர் உழைப்புச் சுரண்டல் மற்றும் கூலி உயர்வுப் பிரச்சனைகளைத் தமிழ்நாட்டின் மைய நிகழ்ச்சி நிரலாகக் கொண்டு வந்த பெருமை கம்யூனிஸ்டுகளையே சாரும்.

தீண்டாமை ஒழிப்பு, ஆலய நுழைவு மற்றும் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான களங்களில் கம்யூனிஸ்டுகள் ஆற்றிய பங்கு மகத்தானது. வர்க்க விடுதலையும் சாதியொழிப்பும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை என்பதை கம்யூனிஸ்டுகள் தத்துவார்த்த அடிப்படையில் மட்டுமல்லாது, அனுபவப்பூர்வ மாகவும் நிறுவினர்.

தமிழகத்தில் நெய்வேலி, திருச்சி பெல், சேலம் உருக்காலை உள்ளிட்ட பொதுத்துறை களைக் கொண்டுவந்து தமிழகத் தொழில் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றியது கம்யூ னிஸ்ட் இயக்கமே.

பண்பாட்டு உரிமைகள் பாதுகாப்பு

தமிழ் மொழிக்காகவும், தமிழ்நாட்டிற்கா கவும் செங்கொடி இயக்கம் ஆற்றியுள்ள பெருந்தொண்டு அளப்பரியது. தமிழர்களின் மொழி, பண்பாட்டு உரிமைகளுக்காக நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் முதல் குரலை எழுப்பி, களத்தில் வலுமிக்க அரணாகவும் நின்றவர்கள் இடதுசாரிகளே. ‘தமிழ்நாடு’ என்ற பெயரைப் பெற்றுத் தருவதில் இடதுசாரிகள் முன்னின்றனர்.

தாய்மொழி வழிக் கல்வியும், தாய்மொழியே அரசு நிர்வாக மொழியாக மக்கள் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் நீக்கமற நிறை ந்திருந்து தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் தமிழே தலைமை தாங்க வேண்டும் என்பதே கம்யூனிஸ்ட் கட்சிகளுடைய கோட்பாடாக இருந்து வந்துள்ளது. தமிழ் மொழி உரிமை, இந்தி - சமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு மற்றும் மாநில உரிமை கோரிக்கைகளில் இடதுசாரிகள் தங்களது தனித்துவமான மார்க்சியப் பார்வையுடன் செயலாற்றி வந்துள்ளனர். மொழி என்பது தகவல் தொடர்புச் சாதனம் மட்டுமல்ல; அது உழைக்கும் மக்க ளின் பண்பாட்டு அடையாளம் என்பதை நன்கு உணர்ந்தவர்கள் கம்யூனிஸ்டுகள். இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலைப் போராட்டக் காலத்திலேயே முன்வைத்து முன்பின் முரணின்றி தீவிரமாகப் போராடியவர்கள் கம்யூனிஸ்டுகள்.

கார்ப்பரேட் - இந்துத்துவா இருளுக்கு மாற்று விடியல்!

நூற்றாண்டு பாரம்பரியத்தைக் கொண்ட இடதுசாரி இயக்கம், இன்று ஒரு மாபெரும் வரலாற்றுச் சவாலை எதிர்கொள்கிறது. ஒருபுறம் கார்ப்பரேட் - நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைகள் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடுகின்றன; மறுபுறம் பாசிச - மதவெறி சக்திகள் அதிகாரக் குவிப்போடு மக்களின் ஜனநாயக உரிமைகளையும் பன்முகத்தன்மையையும் அழிப்பதற்கு முனைப்புடன் மூர்க்கமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்தசக்திகளுக்கு எதிராக, தற்காலிகத் தேர்தல் லாபங்களுக்காக எந்தவொரு கொள்கைச் சமரசமும் செய்து கொள்ளாமல், கருத்தியல் ரீதியாகவும் களத்தி லும் தொடர்ந்து நிற்பதுஇடதுசாரிகள் மட்டுமே.

உழைக்கும் மக்கள் நலன் காக்கும் அடித்தளத்தில் நின்று தமிழ்நாட்டு அரசா ங்கத்தின் செயல்பாடுகள் குறித்த இடது சாரிகளின் அணுகுமுறை அமைந்திடும். தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அடிப்படைவர்க்கங்களின் நலன்களுக்கான போராட்டங்களை இடதுசாரிகள் தொடர்ந்து மக்களைத் திரட்டிமுன்னெடுப்பார்கள்.

அதிகாரங்கள் அனைத்தும் ஒரு புள்ளியில் குவிக்கப்படுவதை எதிர்த்து, மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம், உள்ளாட்சிகளுக்கு அதிகாரப் பரவல், மக்களுக்கு ஜனநாயகம் என்ற உண்மையான கூட்டாட்சிக் கோட்பாட்டை

சமரசமின்றி முன்னிறுத்துவது இடதுசாரிகளே!இதற்கேற்ப இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக்குழு, செயல்திட்டங்களை உருவாக்கி வெகு மக்கள் இயக்கத்தைக் கட்டியமைக்கும். தொழிலாளர், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பல்வேறு பிரிவுகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட நடுத்தர மக்கள், வணிகர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பட்டியலினப் பிரிவு, பழங்குடி மக்கள், சிறுபான்மையினர், குழந்தைகள், மாற்றுத்திற னாளிகள், மாற்றுப் பாலினத்தவர் உள்ளிட்ட அனைத்துப் பகுதி உழைக்கும் மக்களின் நலன் காக்கும் பொருளாதாரக் கொள்கை வழிநின்று இடது ஒருங்கிணைப்புக்குழு செயலாற்றும்.மக்கள் இயக்கத்திற்கான கீழ்க்கண்ட பொதுக் கோரிக்கைகளை இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக்குழு முன்னெடுக் கின்றது:

அரசு நிர்வாகம்

• இந்திய அரசியல் சாசன விழுமியங்களைப் பாதுகாத்தல்.

• தமிழகத்தின் அரசியல், சமூக, கருத்தியல், பண்பாட்டுத் தளங்கள் அனைத்திலும் மதவாத அரசியலை முற்றிலுமாக நிராகரித்தல்.

• மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தல்.

• கூட்டாட்சி மற்றும் மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதி; ஆளுநரையே அரசியல் கருவியாகக் கொண்டு தமிழ்நாடு அரசின் மீதும் ஜனநாயகக் கட்டமைப்புகளின் மீதும் ஒன்றிய அரசு நடத்தும் தாக்குதல்களை முறியடித்தல்.

• நிதி, கல்வி மற்றும் நிர்வாக அதிகாரங்களை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கான அரசியல் போராட்டம். பாரபட்சமான, நிபந்தனைகளுடன் கூடிய மத்திய நிதிப் பகிர்வு முறையை எதிர்த்தல்.

• அமெரிக்காவிடம் சரணாகதியடையும் ஒன்றிய அரசின் அயலுறவுக் கொள்கையை எதிர்த்தல். இந்தியப் பொருளாதாரத்தை அமெரிக்க மற்றும் ஏகாதிபத்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் அனைத்து ஒப்பந்தங்களையும் எதிர்த்தல்.

• மொழி ஆதிக்கத்தையும் இந்தி - சமஸ்கிருத திணிப்பையும் எதிர்ப்பதுடன், தாய்மொழிக் கல்வியை ஊக்குவித்தல். நிர்வாகம், நீதித்துறை உள்ளிட்ட அனைத்திலும் தமிழ் மொழிப் பயன்பாட்டை உறுதிசெய்தல்.

தமிழகப் பொருளாதாரம்

• தனியார்மயமாக்கல் மற்றும் தாராளமய மாக்கலுக்கு உறுதியான எதிர்ப்பு நிலை.

• பொதுத்துறை நிறுவனங்களைப் பாது காத்தல் மற்றும் மாநில வளங்களைக் கார்ப்பரேட்டு

களுக்குக் கைமாற்றுவதைத் தடுத்தல்.

• தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை ரத்துசெய்தல்; 8 மணி நேர வேலையைத் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உறுதிசெய்தல்.

• தொழிலாளர், விவசாயிகள் உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாது காத்தல். தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுப்பேர உரிமை மற்றும் போராட்ட உரிமைகளைப் பாதுகாத்தல்.

• அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தப் பொது விநியோக முறையை மேலும் விரிவுபடுத்துதல்.

• பெரும்பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கூடுதல் வரி விதிக்கும் வரு

வாய் ஈட்டும் நடைமுறைகளைப் பின்பற்றுதல்.

வேலைவாய்ப்பு

• ஒன்றிய அரசின் விபி-ஜி ராம்-ஜி திட்டத்தை ரத்துசெய்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வலியுறுத்துவது; விவசாயத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க200 நாட்கள் வேலை, நாளொ ன்றுக்கு ரூ. 700 ஊதியத்தை உறுதிசெய்தல்; நகர்ப்புறங்களுக்கு இத்திட்டத்தை விரிவாக்கம் செய்தல்.

• உள்ளூர் இயற்கை மற்றும் மனித வளங்க ளைப் பயன்படுத்திப் புதிய தொழில்களை ஊக்குவித்து வேலைவாய்ப்புகளை உருவாக்கிடுதல்.

• அனைத்து அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது, தினக்கூலி, தொகுப்பூதியம், மதிப்பூதியம், ஒப்பந்த மற்றும் வெளிமுகமை போன்ற முறைகளை ஒழித்து ஊழியர்களைப் பணி நிரந்தரம்செய்வது, துறைசார்ந்து புதிய பணியிடங்களை உருவாக்குவது, லஞ்ச - ஊழலுக்கு அப்பாற்பட்டு வெளிப்படையாகநியமனங்கள் நடைபெறுவதை உறுதி செய்வது மற்றும் மாவட்டம் தோறும் அரசின் சார்பில் வேலைவாய்ப்புப் பயிற்சி மையங்களை அமைப்பது.

• தொழிலாளர்களுக்குத் தொழில் நிர்வாகங்கள் குடியிருப்பு வசதி ஏற்படுத்தித் தருவது.

• அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் களுக்கும் வாரிய நிதிப் பலன்களை உயர்த்தி வழங்குவது;குறைந்தபட்ச மாத ஊதியத்தை ரூ. 42,000 ஆக உயர்த்தி வழங்குவது; திட்டப்பணியாளர்கள் மற்றும் அதிகரித்துவரும் ‘கிக்’ (Gig) தொழிலாளர்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாத்தல்.

• தூய்மைப் பணியைத் தனியாருக்கு விடுவதை எதிர்ப்பது. தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றத் தொடர்ந்து வலியுறுத்துவது.

• இளைஞர்களுக்கு வேலையில்லாக் கால நிவாரணம் வழங்கிட வற்புறுத்துவது.

சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள்:

• சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் பாதிக்கப் படும் நிலையில் அரசு நிதி நிறுவனங்கள் வாயிலாக வட்டி மானியம், வராக்கடன் கால வரையறைகளில் தளர்வு, அநீதியானநிலைக்கட்டண உயர்வினை ரத்துசெய்தல், சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது.

• சிறு, குறு, நடுத்தரத் தொழில்களில் தொழில் முனைவோருக்குத் தமிழ்நாடு அரசு முதலீட்டுக் கழகம் மூலம் கடன் வசதி மற்றும் மானியத்தை அதிகரிப்பது; பட்டியலின, பழங்குடி மக்களுக்குத் தாட்கோ அமைப்புகள் மூலம் கடன் வசதிகளை அதிகரிப்பது. வரிக்கொள்கைகள் மற்றும் அனைத்து வகைக் கட்டணங்கள் ஆகியவற்றைத் தொழிலைப் பாதிக்காத வகையில் மாற்றுவது. பெண் தொழில்முனைவோர்கள் கூடுதலாகப் பங்கேற்கும் வகையில் முயற்சிகளை மேற்கொள்வது.

• ஜி.எஸ்.டி. வரி குறைப்பு, மானிய விலையில் மூலப்பொருட்கள் வழங்குவது மற்றும் கைத்தறி, கயிறு போன்ற பாரம்பரிய தொழில் களுக்கான பாதுகாப்பு.

நிலம், குடியிருப்பு

• நிலச்சீர்திருத்த கோரிக்கைகளை முன்னெ டுத்தல், உபரி நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை வீடற்ற, நிலமற்ற ஏழை மற்றும் பட்டியலின, பழங்குடி மக்களுக்குப் பகிர்ந்தளித்தல்.

• பட்டியலின மக்களுக்கான பஞ்சமி நில மீட்புக்கான இயக்கத்தை முன்னெடுத்தல்.

வீட்டு வசதி

• தற்போதுள்ள வீட்டு வசதித் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். ஒரு குடும்பம் வசி ப்பதற்கு அடிப்படை வசதிகள் கொண்ட வாழத் தகுந்த வீடுகள்கட்டித்தர வேண்டுமெனும் கோரிக்கையை வலியுறுத்துவது.

• பல்வேறு புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு வகை மாற்றம் செய்து குடிமனைப் பட்டா வழங்கிடவும், வீடற்ற மக்களுக்குக் குடிமனை வழங்கவும் வற்புறுத்துவது.

• கோவில் நிலங்களில் குடியிருப்போரின் குடியிருப்பு உரிமையைப் பாதுகாத்தல்.

வேளாண்மை

• ஒன்றிய அரசின் விவசாயி விரோத கார்ப்ப ரேட் ஆதரவு வேளாண் கொள்கைகள் அனை த்தையும் எதிர்த்து விவசாயிகள் இயக்கத்தை வலுப்படுத்துதல்.

• அனைத்து வேளாண் விளைபொருட்களுக் கும், எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி, உற்பத்திச் செலவுகளுக்கு மேல் 50 சதவீதம் உயர்த்தி (C2 + 50%) குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உறுதிப்படுத்தச் சட்டம் இயற்றுதல்.

• தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் முன்னுரிமை அடிப்படையில் சிறு, குறு விவசாயி களின் பயிர்க்கடன் மற்றும் நகைக் கடன் தள்ளுபடி செய்தல்.

சமூக நீதி

• ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதை மற்றும் சமூக நீதியை உறுதிசெய்தல்.

• உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியலினப் பிரதிநிதிகளைப் பாகுபடுத்தும் நடைமுறை களை முடிவுக்குக் கொண்டுவருதல்.

• தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்கச் சட்டம் இயற்றப் போராடுதல்; கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை முழுமையாகப் பாதுகாத்தல் மற்றும் அதன் முறையானஅமலாக்கத்தைஉறுதிசெய்தல்.

• சமூகம், நிர்வாகம் மற்றும் கல்விக்கூடங்களில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளை முற்றாக முடிவுக்குக் கொண்டுவருதல்.

• வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முறை யாக அமலாக்குவது.

• பட்டியல் மற்றும் பழங்குடி மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதார வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் சிறப்பு உட்கூறு திட்ட நிதி வேறு தேவைகளுக்கு மடைமாற்றப்படாமல் முழுமையாக அவர்களது நலனுக்கே சென்று சேர்வதை உறுதிசெய்தல்.

• சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க உடனடியாகத் தனிச் சட்டம் இயற்றுதல்.

• நகர்ப்புற, கிராமப்புற ஏழை, எளிய மக்கள் வாழும் பகுதிகளில் கல்வி, சுகாதாரம், கழிப்பி டம் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல்.

• பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதி ரான வன்முறைகளைத் தடுத்தல், பாலின நிகர்நிலை, திருநர்உள்ளிட்டோரின் பன்மைத் துவ உரிமைகளைப் பாதுகாத்தல், சம வேலைக்குச் சம ஊதியம் மற்றும் பெண்கள் சொத்துரி மையை முழுமையாக உறுதிசெய்தல். நாடாளுமன்ற மற்றும்சட்டமன்றங்களில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிசெய்தல்.

• தமிழகத்தில் 20 வயதிற்குட்பட்ட இளம்பெண்கள் சுமார் 57 சதவீதம் பேர் இரத்தசோகையால்பாதிக்கப்பட்டுள்ள நிலையை மாற்றவும், ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்களை வழங்கவும் வற்புறுத்துவதுடன், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,500 உரிமைத் தொகை கிடைக்கவற்புறுத்துவது.

• பழங்குடி மக்களின் குடியிருப்பு உரிமை உள்ளிட்ட வாழ்வாதார மேம்பாட்டு நட வடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் வன உரிமைச் சட்டம் முறையாக அமலாக்கப் படுவதை உறுதிசெய்தல்.

• வருமான வாய்ப்பற்ற மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ஓய்வூதியத்தை உறுதிப் படுத்தல்.

கல்விக் கொள்கை - மருத்துவம்

• தேசியக் கல்விக் கொள்கையை நிராகரித்தல்; சமத்துவமான மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குதல்.

• கல்வி மற்றும் மருத்துவத்தில் அரசின் பொறுப்பை உறுதிசெய்தல்.

• நீட், கியூட் போன்ற தேர்வுகளை ரத்துசெய்தல்.

• கல்வி வணிகமயமாதலை ஒழித்தல்; அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவது மற்றும் அவற்றின் எண்ணிக்கையை அதிகரித்தல்.

• கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருதல்.

• அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பை வலுப்படுத்தி அனைவருக்கும் தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதிசெய்தல் மற்றும் மருத்துவத்தில் தனியார் கொள்ளையைத் தடுத்தல்.

மாற்றுத்திறனாளிகள்

• மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொ கையை உயர்த்தி வழங்குவது மற்றும் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்துக் காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனை வருக்கும் உடனடியாக உதவித்தொகையை உறுதிசெய்தல்.

சுற்றுச்சூழல் - கனிம வளம்

• சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் திட்டங்களை முற்றிலுமாகத் தடுத்தல். புவி வெப்பமயமாதல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிந்து பல்லுயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது.

• மணல் மற்றும் கனிம வளங்கள் கொள்ளை யடிக்கப்படுவதைத் தடுத்து, அவற்றை அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது.

• கார்ப்பரேட் மூலதன நலன்களுக்காக விளைநிலங்களைக் கையகப்படுத்துவது, சுற்றுச்சூழல் அனுமதியின்றித் திட்டங்களைச் செயல்படுத்துவது போன்றவற்றை எதிர்த்தல்.மேற்கண்ட அனைத்திலும் அடங்கியுள்ள ஏராளமான உட்பிரிவுக் கோரிக்கைகளையும் தேர்ந்தெடுத்து,மாற்றுகளை முன்மொழிந்து மக்கள் இயக்கங்களை முன்னெடுக்க இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக்குழு திட்டமிடும்.

கூட்டுச் செயல்பாட்டை வலுப்படுத்துவோம்!

மதச்சார்பின்மை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, மாநில உரிமைகள் பாதுகாப்பு, கூட்டாட்சி, சிறுபான்மையினர் பாதுகாப்பு மற்றும் இந்தித் திணிப்பு எதிர்ப்பு ஆகிய தளங்களில் வலதுசாரி பாசிச இந்துத்துவ சக்திகளை வீழ்த்துவதற்கு ஜனநாயக சக்திகளை அணிதிரட்ட இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக்குழு முயற்சிக்கும்.

மாநிலம் தழுவிய பிரச்சனைகள் குறித்த இயக்கங்களுக்கு இடது ஒருங்கிணைப்புக் குழு அவ்வப்போது வடிவங்களைத் திட்டமிடும். அவ்வாறான முன்னெடுப்புகளில் ஜனநாயக சக்திகளை இணைக்க வேண்டிய தேவை ஏற்படுமானால், அதற்கான முயற்சிகளையும் இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு மேற்கொள்ளும்.

வலதுசாரி - பாசிசக் கருத்தியல், ஆளும் வர்க்கங்களின் நவதாராளமயக் கருத்தியல் ஆகிய இரண்டிற்கும் எதிரான சித்தாந்தப் போரினை இடதுசாரி மாற்றை முன்வைத்து கூட்டாக முன்னெடுப்போம்.

அவ்வப்போது உருவாகிற நிலைமைகள் மற்றும் முன்னுக்கு வரும் பிரச்சனைகளை முன்னிறுத்திச் செயல்திட்ட அடிப்படையில் ஒருங்கிணைந்து களத்தில் பணியாற்றுவோம்.

வார்த்தைகள் அல்ல; வரலாற்றுச் சாதனைகள்

இடதுசாரிகளின் வரலாறு என்பது தேர்தல் வெற்றிகள் மட்டுமல்ல; அது உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான அயராத போராட்டங்களாலும் இரத்தத்தாலும் எழுதப்பட்டதாகும். இந்தப் பின்னணியில்தான், சமகாலக் கார்ப்பரேட் பொருளாதார - மதவெறி அரசியலுக்கு மாற்று இடதுசாரிகளின் வர்க்க அரசியலே என்பதை உரக்கச் சொல்கிறோம்.

கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா மாநி லங்களில் இடதுசாரி அரசுகள் நடைமுறையில் சாத்தியமாக்கிய நிலச்சீர்திருத்தம், அதிகாரப் பரவலாக்கல், மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் ஆகியவை பிற மாநிலங்களும் ஏற்றுச் செயல்படும் முன்னோடித் திட்டங்களாக விளங்குகின்றன. இடதுசாரிகள் வார்த்தைகளால் மட்டுமல்ல, வரலாற்றுச் சாதனை களாலும் நிகரற்ற இயக்கங்களாக வலம் வந்துகொண்டிருப்பவர்கள் ஆவர்.

இடதுசாரிகளின் மாற்றுப் பாதையே இந்தியாவின் உண்மையான விடியலாகத் திகழ்கிறது.

கடந்த காலத் தியாகங்களின் அடித்தளத்தில் நின்று, ஒரு சோசலிச, ஜனநாயக, சுரண்டலற்ற சமூகத்தைப் படைக்க இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக்குழு உறுதியேற்றுச் செயல்படும்.

எல்லோரும் எல்லாமும் பெறுகிற சோசலிச இலக்கை நோக்கி முன்னேறுவோம்!

– இடதுசாரிக் கட்சிகளின் மாநில ஒருங்கிணைப்புக்குழு