தமிழக அரசு வழக்கறிஞர்கள் சேம நல நிதியை உயர்த்த வேண்டும்! வழக்கறிஞர் சங்க மாநிலக்குழு வலியுறுத்தல்!
18 Jun 2026, 10:41 pm

தமிழக அரசு வழக்கறிஞர்கள் சேம நல நிதியை உயர்த்த வேண்டும்! வழக்கறிஞர் சங்க மாநிலக்குழு வலியுறுத்தல்!

உளுந்தூர்பேட்டை, ஜூன் 18 - தமிழகத்தில் வழக்கறிஞர் களின் நீண்டகாலக் கோரிக்கை களை நிறைவேற்றக் கோரி, வரும் ஜூலை 15 அன்று அனைத்து நீதி மன்ற வளாகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க த்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்ட த்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் ஜூன் 14 அன்று உளுந்தூ ர்பேட்டையில் மாநிலத் துணைத் தலைவர் கே. இளங்கோ தலைமை யில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், மாநிலச் செயல்தலைவர் ஏ. கோதண்டம், மாநிலப் பொதுச் செயலாளர் ச. சிவக் குமார் ஆகியோர் செய்தியறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அந்த அறிக்கையில், தமிழ கத்தில் வழக்கறிஞர்களின் சேம நல நிதியை உயர்த்த வேண்டும் என்றும், வழக்கறிஞர்களாகப் பதிவு செய்து முதல் மூன்று ஆண்டுகள் வரை அனைத்து இளம் வழக்கறிஞர்களுக்கும் மாதந்தோறும் மூவாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நீதிமன்ற வளாகங்களில் குழந்தைகள் காப்பகம் மற்றும் பெண் வழக்கறிஞர்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து, தவெக தலைமையிலான புதிய அரசிடம் கோரிக்கை மனு அளிப்பது என்றும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 15 அன்று அனைத்து நீதிமன்றங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்து வது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது. சங்கத்தின் மாநில மாநாட்டை வரும் நவம்பர் மாதம் நடத்தவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.

இயற்கை நீதிக்கு எதிரானது இக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட இதர முக்கிய தீர்மானங்களின் விவரம்: கிரிமினல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை முற்றிலுமாக நீக்க வேண்டும் என அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் நீண்டகாலமாகப் போராடி வருகிறது. ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள பாரதீய நாகரீக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) சட்டத்தின் பிரிவு 384, ஜனநாயக உரிமைகளுக்கும் இயற்கை நீதிக்கும் எதிரானது ஆகும்.

வழக்கறிஞர்களின் தொழில்முறை நடவடிக்கைகளைக் கண்காணிக்க பார்கவுன்சில் மற்றும் வழக்கறி ஞர்கள் சட்டம் 1961 ஆகியவை நடைமுறையில் உள்ள நிலையில், வழக்கறிஞர்களின் உரிமையை நசுக்கும் வகையில் உள்ள பிஎன்எஸ்எஸ் சட்டப்பிரிவு 384-ஐ முழுமையாக நீக்க வேண்டும் என்று சங்கம் கோருகிறது. மேலும், மதுரை வழக்கறி ஞர்கள் சங்க நிர்வாகிகள் மீது மதுரை 5-வது மாவட்ட குற்றவியல் நீதிபதி காரணம் கேட்டு அறிவிப்பு அனுப்பியிருப்பதற்கும், அபராதம் விதித்திருப்பதற்கும் சங்கம் தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த நட வடிக்கைகள் அனைத்தும் உட னடியாகக் கைவிடப்பட வேண்டும். இவற்றுடன், உழைப்பாளர் களின் உரிமைகளைப் பறிக்கும் நான்கு தொழிலாளர் சட்டங்களை யும், அதற்கென உருவாக்கப் பட்டுள்ள விதிகளையும் ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், மத்திய தொழிற்சங்கங்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் உடனடி யாக நிறைவேற்ற வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.