தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

22 Jul 2026, 10:00 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

இலங்கை முன்னாள் எம்.பி. மு.க. ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை: தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை, இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்தத் தலைவருமான எம்.ஏ. சுமந்திரன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பு அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது என தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பழனி நில மோசடி சிபிஐ விசாரிக்க எடப்பாடி கோரிக்கை

சென்னை: பழனி கோயில் நில பத்திரப்பதிவு மோசடி வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். சிபிசிஐடி நடத்தும் விசாரணை, குற்ற வாளிகளைக் காப்பாற்றும் நோக்கிலேயே உள்ளது என அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையே, பழனி கோயில் நில பத்திரப்பதிவு மோசடி தொடர்பாகத் தவெக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 25 அன்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

செந்தில் பாலாஜி வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாகப் பதிவான வழக்கில் முன்ஜாமீன் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோத ரர் அசோக்குமார், வேறு வழக்குகளில் தங்களைக் கைது செய்யக் கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஒரு கணக்கு தீர்க்கப்பட வேண்டியதிருக்கிறது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளிப்படையாகப் பேசிய நிலையில், காவல்துறை தங்களை விசாரணை என்ற பெய ரில் துன்புறுத்தக் கூடாது என்றும் கோரியிருந்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரை யன், குதிரை பேர வழக்கில் மட்டுமே முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகவும், மற்ற வழக்குகள் தொடர் பாக முன்கூட்டியே உத்தரவிட முடியாது எனக் கூறி மனுக் களைத் தள்ளுபடி செய்தார். இதனிடையே, ஏற்கனவே திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகாததைக் சுட்டிக்காட்டி, அவர் களைக் கைது செய்யப் போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அன்புமணிக்கு எதிரான வழக்கு வாபஸ்!

சென்னை: பாமக தலைவராகத் தன்னை அறிவிக்கக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்திருந்த வழக்கை அவரே திரும்பப் பெற்றார். பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட்டதை அடுத்து, வழக்கைத் திரும்பப் பெறுவ தாக ராமதாஸ் தரப்பு உரிமையியல் நீதிமன்றத்தில் தெரி வித்தது. இதையடுத்து, மனுவை முடித்து வைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிவர்மன் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

நாகர்கோவில்: மாற்றுத் திறனாளி சபரிவர்மன் (35), நாகர்கோவில் சிறைக்காவலில் உயிரிழந்த வழக்கு விசா ரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். உடற்கூராய்வில் 19 வெளிக்காயங்கள் இருந்ததாக வும், மூர்க்கமான தாக்குதல் மற்றும் வலது கை எலும்பு முறிவு இருந்ததும் தெரியவந்தது. அத்துடன், சிறைக்குள் கைகள் கட்டப்பட்ட நிலையில் அவர் தாக்கப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே, விரிவான விசாரணை நடத்துவதற்காக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் பரிந்துரையில், சபரிவர்மன் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடை தனியார் மயம்?

அமைச்சர் தகவல் சென்னை: டாஸ்மாக் கடைகளைத் தனியார் மய மாக்கும் திட்டம் தொடர்பாகப் பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு வருவதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். மக்களின் நலன் கருதி இந்த விவ காரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி யளித்துள்ளார்.

தூத்துக்குடி, சிவகங்கை எஸ்.பி.க்கள் இடமாற்றம்

சென்னை, ஜூலை 22 - தமிழக உள்துறை, 5 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தர விட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அபி ஷேக் குப்தா, சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யாகவும், சிவகங்கை எஸ்.பி.யாக இருந்த சிவ பிரசாத், தூத்துக்குடி மாவட்ட எஸ். பி.யாகவும் இடமாற்ற ப்பட்டுள்ளனர். ஊர்க்கா வல் படை டி.ஐ.ஜி.யாக விஜயலட்சுமியும், சென்னை மேற்கு சரக லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி.யாக சண்முக பிரியா வும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு தொடர் போராட்டம் அறிவிப்பு

சென்னை, ஜூலை 22 - ஓய்வூதியர் சங்கங்க ளின் தேசிய ஒருங்கி ணைப்புக் குழு (என்சிசி பிஏ) மற்றும் பொது ஓய்வூதியர் சங்கங்களின் மேடை (எப்சிபிஏ) ஆகிய வற்றின் கூட்டம் ஜூலை 18-19 தேதிகளில் சென் னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஓய்வூதிய மதிப்பீட்டுச் சட்டம் - 2025ஐ முழுமை யாக ரத்து செய்ய வேண் டும்; 8-ஆவது மத்திய ஊதி யக் குழுவின் வரம்புகளை திருத்தி, 2026-க்கு முன், ஓய்வு பெற்ற அனை வருக்கும் ஓய்வூதிய திருத்தத்தை உறுதி செய்ய வேண்டும்; பண வீக்கத்தை ஈடுகட்ட, 50 சத விகித வீட்டு வாடகைப் படியை அடிப்படை ஊதி யம் மற்றும் ஓய்வூதியத் துடன் இணைக்க வேண் டும்; 8-ஆவது ஊதியக் குழு அறிக்கை வெளியா கும் வரை இடைக்கால நிவாரணம் வழங்க வேண் டும் என வலியுறுத்தி ஆகஸ்ட் 19 அன்று கவன ஈர்ப்பு நாள் கடைபிடிக்கப் படும். செப்டம்பர் 17 முதல் 19 வரை, 3 நாட்கள் மாநிலத் தலைநகரங்களில் தர்ணா வும், நவம்பர் 25 அன்று தில்லியில் நாடாளுமன் றம் நோக்கி பேரணியும் நடைபெறும் என்று முடி வெடுக்கப்பட்டுள்ளது.

காலை உணவுத் திட்டப் பெயர் மாற்றம்

சென்னை, ஜூலை 22 - முந்தைய தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முதலமைச்ச ரின் காலை உணவுத் திட்டம், ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உண வுத் திட்டம்’ என பெயர் மாற்றம் செய்து அர சாணை வெளியிடப்பட்டு உள்ளது. பள்ளி செல்லும் குழந் தைகளின் பசியைப் போக்குவது, ஊட்டச் சத்துக் குறைபாட்டை நீக்குவது, மாணவர் களின் வருகையை அதி கரிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறி முகப்படுத்திய இத்திட்டத் தின் கீழ், காய்கறி சாம்பாருடன் ரவா கிச்சடி, சேமியா உப்புமா, வெண்பொங்கல், சத்து மாவு கஞ்சி உள்ளிட்ட ஆரோக்கியமான உணவு கள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத் தக்கது. இத்திட்டம் தற்போது, 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.