தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
12 Aug 2026, 1:10 am
<p><strong>தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டத்தில் நில அளவைப் பணியின் போது குறுவட்ட அளவரை தாக்கிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி செவ்வாயன்று (ஆக.11) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் அண்ணா.குபேரன், பொருளாளர் ஸ்டான்லி உள்ளிட்டு தோழமைச் சங்கத் தலைவர்கள் உரையாற்றினர்.</p>
