நொய்டா எழுச்சியிலிருந்து பாடம் கற்காத தமிழ்நாடு - எஸ். கண்ணன்
10 Nov 2026, 9:58 pm

நொய்டா எழுச்சியிலிருந்து பாடம் கற்காத தமிழ்நாடு - எஸ். கண்ணன்

பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடுகளையும் முதலீட்டாளர்களையும் அழைத்து வந்த பெருமையை பாஜக முதல் தவெக வரை எல்லோரும் பேசுகின்றனர். ஜெயலலிதா, கலைஞர், மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி என முன்னாள் முதலமைச்சர்கள்அனைவரும் இந்தச் சொல்லாடலில்பெருமிதம் அடைந்தவர்களே.

2011 முதல் 2021 வரை ஆட்சியில் இருந்த அதிமுக, ரூ.3.41 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்ததாகவும், அதில் 30 முதல் 35 சதவீதம் அதே காலத்தில் செயல்பாட்டுக்கு வந்ததாகவும் கூறுகிறது. 2021–26 காலத்தில் 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.12.37 லட்சம்கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாக திமுக கூறுகிறது. தற்போதைய தவெக அரசு, “வெற்றி முதலீடுகள்” திட்டத்தில் 100 நாட்களிலேயே 106 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1,02,514 கோடி முதலீட்டை ஈர்த்து, லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளைஉருவாக்கிவிட்டதாக அறிவித்துள்ளது.ஆனால் பொதுவாக முதலீடுகள் பல பத்தாண்டு களில்தான் ஓரிரு லட்சம் நேரடி, மறைமுக வேலை வாய்ப்புகளைஉருவாக்கியுள்ளன. அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை ஒன்று உண்டு: முதலீடு செய்த தொகையையும், அதற்கு இணையானலாபத்தையும் அதிவேகமாக எடுத்துச் செல்லும் திறன்இந்த முதலீட்டாளர்களுக்கு உண்டு. அந்த அளவுக்குத் தொழிலாளர்களின் உழைப்புத் திறனும், அவர்கள் சுரண்டப்படும் அளவும் அதிகம். முதலீட்டுத் தொகையையும் ஒப்பந்த எண்ணிக்கையையும் பெருமையாகப் பேசும் அரசுகள், அந்த ஆலை களுக்குள்தொழிலாளர்கள் எந்த நிலையில் வேலை செய்கிறார்கள் என்பதைப் பற்றிப் பேசுவதே இல்லை. ஒரகடம் அதை அம்பலப்படுத்தியுள்ளது.

தீபாவளி நேரத்தில் வெடித்த குரல்அக்டோபர் 30 மாலை, ஒரகடம் ராயல் என்ஃபீல்டு ஆலையில் 4,000-க்கும் மேற்பட்ட பயிற்சித் தொழிலாளர்கள் தீபாவளிப் பட்டாசு போலப் படபடவென வெடித்தனர். மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப் பாளர், தொழிலாளர் துறை அதிகாரிகள் 10 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, மறுநாள் அதிகாலை 4 மணிக்குப் போராட்டம் முடிவுக்கு வந்தது. அவர்களின் கோரிக்கைகள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் தருபவை:

• கடந்த முறை நான்கு நாட்களாக இருந்த தீபாவளி விடுப்பை இந்த முறை இரண்டு நாட்களாகக் குறைத்தது சரியல்ல; நான்கு நாள் விடுப்பு வேண்டும்.

• குடிநீரும் போதுமான கழிப்பறைகளும் வேண்டும். உணவகத்தில் நின்றுகொண்டே சாப்பிடும் நிலை மாறி, உட்கார இடம் வேண்டும்.

• பயிற்சித் தொழிலாளர்களுக்கும் போனஸ் வேண்டும்.

இவை வாழ்வாதாரத்தில் பெரிய மாற்றம் கொண்டு வரும் கோரிக்கைகள் அல்ல; மிக எளியவை. ஆனால் நீண்ட காலமாகத் தேக்கி வைக்கப்பட்ட கொடுமைகள், விடுப்புக் குறைப்பு என்ற சிறு பொறியில்பெருவெடிப்பாக மாறின. கழிப்பறை, உணவகத்தில்உட்காரும் இடம் போன்ற சிறிய பிரச்சனைகளுக் காகவே ஆயிரக்கணக்கானோர் இரவு முழுவதும்கொந்தளித்தனர் என்றால், உள்ளே நிலவும் நிலைமை எத்தகையது என்பதை ஊகிக்கலாம்.2012 முதல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஐந்து இடங்களில் சுமார் ரூ.8,000 கோடியை இந்நிறுவனம் முதலீடு செய்துள்ளது. நேரடியாகவும், பயிற்சி, ஒப்பந்தம் என்றபெயர்களிலும் சுமார் 23,000 பேர் பணியாற்றுகின்றனர்; அவர்களில் கணிசமானோர் பெண்கள். ஆண்டுக்கு 20லட்சம் மோட்டார் சைக்கிள்கள் என்ற இலக்கை நோக்கி நிறுவனம் விரைகிறது. ஆனாலும் சின்னச்சின்னக் கோரிக்கைகளைக்கூட நிர்வாகம் நிறைவேற்றவில்லை. ஒப்பந்த, பயிற்சித் தொழிலாளர்களுக்கு எதற்குக் கண்ணியமான வசதிகள் என்ற மனப்பான்மையே இதற்கு காரணம்.

குப்பைத் தொட்டியில் தொழிற்சாலைச் சட்டங்கள்

தீபாவளிக்கு ஏன் நான்கு நாள் விடுப்பு என்று சிலர் கேட்கலாம். பயிற்சி, ஒப்பந்தத் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் மட்டும் வேலை செய்வதில்லை. சில நாட்களில் இரண்டு ஷிப்டுகள், சில நாட்களில் 12 மணி நேரம் என்று வேலை வாங்கப்படுகின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளிலும் உற்பத்தி நடக்கிறது; அந்த நாட்களில் வாய்பேச முடியாத அடிமைகளாக நடத்தப்படும் இவர்களே வேலை வாங்கப்படுகின்றனர். ஓய்வின்றி உழைத்வர்கள் பண்டிகைக் காலத்தில் நான்கு நாள் கேட்பது நியாயமே. கடந்த ஆண்டு அதை உணர்ந்து வழங்கிய நிர்வாகம் இந்த ஆண்டு மறுத்தது நியாயமேஇல்லை. இந்த மிகைப்பணி அனைத்தும் தொழிற் சாலைப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டங்களுக்கு எதிரானவை.தொழிற்சாலைகள் சட்டம் பிரிவு 19-ன்படி, நூறு பேர் வரையுள்ள ஆலையில் 25 பேருக்கு ஒரு கழிப்பறையும், அதற்கு மேல் 50 பேருக்கு ஒரு கழிப்பறையும், ஆண் பெண்ணுக்குத் தனித்தனியாக இருக்க வேண்டும். அவை கிருமிநாசினி, தண்ணீர் வசதியோடு முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். ஆனால்பல்லாயிரம் பேர் பணியாற்றும் இந்த ஆலையில், நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு மட்டுமேகழிப்பறைகள் கட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவை துர்நாற்றம் வீசும் மோசமான நிலையில்இருந்ததைப் போராட்டத்தின்போது பார்வையிட்ட காவல்துறை, தொழிலாளர் துறை அதிகாரிகளேஒப்புக்கொள்கின்றனர்.சட்டப்பிரிவு 46, உணவகங்களுக்கான விதிகளைச் சொல்கிறது: காற்றோட்டமான இடம், பணியாற்றுவோரில் 30 சதவீதம் பேர் அமரும் இருக்கைகள், சுத்தமான பராமரிப்பு தேவை. ஆனால் இங்கும் நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு மட்டுமே இருக்கைகள். ஒப்பந்த, பயிற்சித் தொழிலாளர்கள் நின்றுகொண்டே சாப்பிடும் பாரபட்சம் பல ஆலைகளில் நிலவுகிறது. இவை அனைத்தும் நவீனத்தீண்டாமையே.

விதிமீறலுக்கு உரிமம் வழங்கும் பாஜக

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தில்லியைச் சுற்றியுள்ள தேசியத் தலைநகர் மண்டலத்தின் நொய்டா உள்ளிட்ட தொழில் நகரங்களில் இதே போன்ற பெருவெடிப்பு அரங்கேறியது. நீண்ட வேலை நேரம், குறைந்த கூலி,

ஆண்டுக்கணக்கில் ஒப்பந்த அடிப்படையிலேயே வேலை வாங்கப்படுவது ஆகியவற்றுக்கு எதிராகத் தொழிலாளர்கள் போராடினர். அங்குள்ள மாநிலஅரசுகள் குறைந்தபட்ச ஊதியத்தைச் சரிசெய்ய முனைந்தனவே தவிர, வேலை நேரம், ஓய்வு, பணியிடப்பாதுகாப்பு, உணவகம், கழிப்பறை போன்றவற்றில் கவனம் செலுத்தவில்லை.தொழிலாளர்கள் சமூக அடுக்கின் அடிமட்டத்தில் இருப்பவர்கள்; அவர்களைக் கீழ்த்தரமாக நடத்துவதில் தவறில்லை என்ற அதிகாரவர்க்க அணுகுமுறையும் இதற்கு உடந்தையாக உள்ளது. பெண்கள் வாய் திறக்கக் கூடாது, அடிப்படைத் தேவைகளுக்காக முறையிடக் கூடாது என்ற ஆதிக்கச் சிந்தனையும் இந்தக் கொடுமைகளுக்குக் காரணம்.

ஒன்றிய பாஜக அரசு அமலாக்கி வரும் தொழிலாளர் விரோத நான்கு தொகுப்புச் சட்டங்கள், இந்த விதிமீறல்களை மேலும் தீவிரமாகச் செய்யும்வாய்ப்பை உருவாக்கியுள்ளன. இதுவரை தொழிற்சாலைத் துறை அதிகாரிகள், சங்கம் உள்ள இடங்களில் புகாரின் பேரிலும், மற்ற இடங்களில் தாமாகவும்ஆலைகளைப் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பெற்றிருந்தனர். மோடி அரசின் சட்டம் இந்த அதிகாரத்தைப் பறித்துள் ளது. புகாரின் பேரில் ஆலைக்குச் செல்ல வேண்டுமென்றாலும், முன்கூட்டியே தகவல் தெரிவித்து அனுமதி பெற வேண்டும் என்ற நிலை, முதலாளி கள்விதிமீறல்களை ஒளித்து வைக்க வழி செய்கிறது. “இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியத்தை” ஒழிப்பதாகச் சொல்லி,கார்ப்பரேட் ராஜ்ஜியத்தைப் பலப்படுத்துகிறது இச்சட்டம். வேலை பரவல் நேரத்தை 10.5 மணியிலிருந்து 12 மணிநேரமாக உயர்த்தியது, மூன்று மாதங்களுக்கான மிகைப்பணி வரம்பை 75-லிருந்து 125 மணிநேரமாக உயர்த்தியதுஆகியவை கூடுதல் உழைப்புச் சுரண்டலுக்கு வழங்கப்பட்ட உரிமங்களே.

ஒப்பந்தங்களில் வேண்டும் உத்தரவாதம்

ஐந்தாண்டுகளுக்கு முன், பாதுகாப்பற்ற உணவால் 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை எதிர்த்து, 10,000-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பெங்களூரு நெடுஞ்சாலையில்அமர்ந்து போராடியதைத் தமிழ்நாடு மறந்துவிடக் கூடாது. அன்று உணவு; இன்று விடுப்பும் கழிப்பறையும். பிரச்சனைகள் மாறுகின்றன, ஆனால் அடிப்படைக் காரணம் ஒன்றுதான்: தொழிலாளர்கள் மீதான தீவிரமடையும் சுரண்டல்.

இந்த அனுபவங்களைக் கணக்கில் கொண்டு, இத்தகைய தவறுகள் இனி நடக்காது என்ற உறுதிமொழி புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலேயே இடம்பெற வேண்டும். தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை பரவலாக மறுக்கப்படுவதே இந்தத் தீவிரச் சுரண்டலை அரங்கேற்றத்தான் என்பதைத் தமிழ்நாடு அரசு புரிந்துகொள்ள வேண்டும்; தடுப்பு நட வடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்; தொழிலாளர் குரலுக்குச் செவிமடுக்க வேண்டும்.