குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் அறிவிப்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு
12 Jun 2026, 9:17 pm

குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் அறிவிப்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு

சென்னை, ஜூன் 12 - குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் 2026 அறிவிக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

நடப்பாண்டு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை வெள்ளிக்கிழமை (ஜூன் 12 ) திறந்திருக்க வேண்டும். மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத நிலையில், தென்மேற்கு பருவமழையும் காலத்தோடு துவங்காத நிலை யில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் 1000 கன அடிக்குள் உள்ளதால் ஆற்று பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆழ்குழாய் பாசனத்தை நம்பி குறுவை சாகுபடி மேற்கொள்ளவுள்ள விவ சாயிகள் பயன்பெறும் வகையில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் 2026-ஐ அறிவித்துள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வர வேற்கிறோம்.

இந்த தொகுப்பு திட்டத்தின் மூலம் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.77.50 கோடியும், டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு ரூ.57.33 கோடியும், மொத்தமாக ரூ.134.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, இயந்திர நடவு, நேரடி நெல் விதைப்பதற்கு ஊக்கத்தொகை, உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள், விதை நெல் மானியம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது நல்ல அம்சமாகும்.

இருந்தாலும், ஆற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகள் குறிப்பாக ஏழை, சிறு, குறு விவசாயிகள் குறுவை சாகுபடியை இழந்து நிற்கும் நிலையில், இவர்களுக்கு உரிய நிவா ரணம் வழங்குவது குறித்து மாநில அரசு பரிசீலனை செய்து அறிவிப்பு வெளியிட வேண்டுமென தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.