கிட்னி திருட்டு விவகாரம் விசாரணையை மீண்டும் தொடங்க அரசு உத்தரவு
20 May 2026, 11:24 pm
<p><strong>கிட்னி திருட்டு விவகாரம் விசாரணையை மீண்டும் தொடங்க அரசு உத்தரவு</strong></p><p>சென்னை, மே 20 - தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய கிட்னி திருட்டு விவகாரத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் சித்ரா தலைமையில் விசாரணையை மீண்டும் தொடங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், திருச்சிராப்பள்ளி மற்றும் ஈரோடு பகுதிகளில் ஏழை விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து நடந்த சிறுநீரகத் திருட்டு சம்பவம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்குகளில், மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், தமிழகக் கும்பல் துணையுடன் மகாராஷ்டிர விவசாயிகளிடமும் கிட்னி திருட்டு நடந்திருப்பது அம்பலமானது. தொடர்ந்து மகாராஷ்டிரா சிறப்பு புலனாய்வு குழுவினர் திருச்சியில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சி சிதார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனிடையே, தேர்தல் காரணமாக விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய அரசு பொறுப்பேற்றதை அடுத்து விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.</p>
