தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாகன உற்பத்தியில் முதன்மை மாநிலம் தமிழ்நாடு

9 Feb 2026, 3:02 pm
வாகன உற்பத்தியில் முதன்மை மாநிலம் தமிழ்நாடு

வாகன உற்பத்தியில் முதன்மை மாநிலம் தமிழ்நாடு

முதல்வர் பெருமிதம்

முதல்வர் பெருமிதம் சென்னை, பிப்.9- பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட் டையில் அமைக்கப்பட்டுள்ள டாடா மோட் டார்ஸ் கார் உற்பத்தி தொழிற்சாலையை  முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்களன்று திறந்து வைத்தார். தமிழக தொழில், முதலீட்டு ஊக்கு விப்பு மற்றும் வர்த்தகம் சார்பில், ராணிப் பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம்  துறை தொழிற்பூங்காவில் ரூ.9 ஆயிரம்  கோடி முதலீடு மற்றும் 5 ஆயிரம் நபர் களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகை யில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின்  வாகன உற்பத்தி ஆலை அமைக்க 28.9. 2024 அன்று முதல்வர் அடிக்கல் நாட்டினார். முதற்கட்ட பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், டாடா தொழிற்சாலையை திறந்து வைத்து, உற்பத்தி செய்யப்பட்டுள்ள முதல்  வாகனத்தின் இயக்கத்தை திங்கள்கிழமை  காலை கொடியசைத்து தொடங்கி வைத் தார். மேலும், இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட ரேஞ்ச் ரோவர் காரை முதல்வர் ஸ்டாலின் ஓட்டிப் பார்த்தார். பின்னர் விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், “தமிழகத்துக்கு இன்று பொன்னான நாள். இந்தியாவின் வாகன  உற்பத்தி மையம் தமிழ்நாடு என்றும்,  மின்வாகன உற்பத்தியின் தலைந கரமும் தமிழ்நாடுதான். தமிழ்நாட்டில் உள்ள எந்த துறையில் முதலீடு செய்தா லும், அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங் குவோம் என்றும், டாடா நிறுவனம் இன்னும் அதிகமாக முதலீடு செய்ய  வேண்டும். மற்ற மாநிலங்களைத் தாண்டி  உலக நாடுகளோடு நாம் போட்டி போடு கிறோம். அடிக்கல் நாட்டப்பட்ட 16 மாதத்தி லேயே கார் ஆலை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு எந்த அளவுக்கு தொழில் செய்ய ஏற்ற மாநிலம் என்பதற்கு இதுவே  எடுத்துக்காட்டு. அரசின் செயல்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில் விரைவில் முதலீடுகள் செயல்பாட்டு மாநாடு நடத்தப் படவுள்ளது” என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.