தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நாட்டிலேயே மிக வேகமாக வளரும் மாநிலம் 3-ஆவது ஆண்டாக தமிழ்நாடு முதலிடம்!

13 Dec 2025, 4:23 pm
நாட்டிலேயே மிக வேகமாக வளரும் மாநிலம் 3-ஆவது ஆண்டாக தமிழ்நாடு முதலிடம்!
<p><strong>நாட்டிலேயே மிக வேகமாக வளரும் மாநிலம் 3-ஆவது ஆண்டாக தமிழ்நாடு முதலிடம்!</strong></p> <p>புதுதில்லி, டிச.13- தமிழ்நாட்டின் மாநில மொத்த உள் நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி) 2023- 24-இல் ரூ.26.89 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2024-25-ஆம் நிதி யாண்டில் ரூ. 31.18 லட்சம் கோடியாக உயா்ந்து 16 சதவிகித வளா்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. &nbsp;கடந்த 2021-22 மற்றும் 2024-25 இடையே தமிழ்நாட்டின் ஜிடிபி ரூ. 20.72 லட்சம் கோடியில் இருந்து ரூ. &nbsp;31.18 லட்சம் கோடியாக உயா்ந்துள் ளது. 2021-22-இல் தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் ரூ. 2.42 லட்சமாக இருந்த நிலையில் 2024-25-இல் ரூ. 3.62 &nbsp;லட்சமாக அதிகரித்துள்ளது. இந்தச் சாதனை குறி த்து முதலமைச் சர் மு.க. ஸ்டா லின், தமது &lsquo;எக்ஸ்&rsquo; கருத் &nbsp;துப் பதிவிட்டுள் ளார். அதில், &ldquo;பரப்பளவிலும் மக்கள் தொகை யிலும் பெரிய மாநிலமாக இல்லா விட்டாலும், ஒன்றிய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லாவிட்டாலும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 16 சதவிகிதத்துடன் &lsquo;நம்பர் &nbsp;ஒன்&rsquo; என்ற இடத்தை தமிழ்நாடு பிடித்தி ருக்கிறது! 2021-2025 வரையிலான நிதியாண்டு களில் மட்டும் தமிழ்நாட்டின் பொருளா தாரம் 10.5 லட்சம் கோடி ரூபாய் அள வுக்கு உயர்ந்திருக்கிறது. இந்த வளர்ச்சி &nbsp;விகிதமானது வளர்ந்த பெரிய மாநி லங்களான, மகாராஷ்டிரா, கர்நாடகம், &nbsp;குஜராத் போன்றவற்றுடன் ஒப்பி டும்போது விஞ்சியதாக உள்ளது. தனி நபர் வருமான உயர்விலும் தமிழ்நாட் டின் வெற்றி தொடர்கிறது. 2031-ஆம் ஆண்டு, திராவிட மாடல் &nbsp;2.0 நிறைவுறும்போது, இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறை யே இல்லை என்ற நிலை உருவாவது உறுதி!&rdquo; என்று குறிப்பிட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.