தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாடே சனாதனத்திற்கு எதிராக உள்ளதாம்! நாடாளுமன்றத்தில் மதவெறியைத் தூண்டி பாஜக எம்.பி. பேச்சு!

12 Dec 2025, 2:40 pm
தமிழ்நாடே சனாதனத்திற்கு எதிராக உள்ளதாம்! நாடாளுமன்றத்தில் மதவெறியைத் தூண்டி பாஜக எம்.பி. பேச்சு!
<p><strong>தமிழ்நாடே சனாதனத்திற்கு எதிராக உள்ளதாம்! நாடாளுமன்றத்தில் மதவெறியைத் தூண்டி பாஜக எம்.பி. பேச்சு!</strong></p> <p>புதுதில்லி, டிச. 12 - திருப்பரங்குன்றம் விவகாரத்தில், நாடாளுமன்றத்திலேயே மதவெறியைத் தூண்டும் வகையில், பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் பேசியதற்கு இந்தியா &nbsp;கூட்டணி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். இதையொட்டிய போராட்டத்தால், நாடாளுமன்ற மக்களவை முடங்கியது. நாடாளுமன்ற மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தின் போது, பாஜக எம்.பி. அனுராக் பேசினார். &ldquo;இந்த அவையில் ஒரு முக்கிய விவகாரத்தை எழுப்ப விரும்புகிறேன். நாட்டில் ஒரு மாநிலம் (தமிழ்நாடு) சனா தனத்துக்கு எதிரான மாநிலமாக மாறி வருகிறது. அந்த மாநிலத்தில் உள்ள அமைச்சர்கள் சனாதனத்துக்கு எதிராக அறிக்கை வெளியிடுகிறார்கள். கோவிலுக்கு செல்வதற்கு, பக்தர்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தீபம் ஏற்ற கோவிலுக்குச் சென்றால், அங்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தீபம் ஏற்ற நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தர வை செயல்படுத்தாத தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கடுமை யான விமர்சனத்தையும் முன் வைத்துள் ளது. ஆனால் கோவிலை நோக்கிச் சென்ற &nbsp;பக்தர்கள் மீது தமிழக அரசு தடியடி நடத்த உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவு இருந்த போதிலும், இந்து பக்தர்கள் கார்த்திகை தீபத்தை ஏற்ற அனுமதிக்கப்படவில்லை. திமுக தலைமையிலான தமிழக அரசு இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி, திருப்திப்படுத்தும் அரசியலை செய்கிறது&rdquo; என்று அனுராக் தாக்குர் கூறினார். அனுராக் தாக்குரின் இந்தப் பேச்சிற்கு, திமுக உள்ளிட்ட &lsquo;இந்தியா&rsquo; கூட்டணியின் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது பேச்சை நீக்கக் கோரி சபாநாய கர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கமிட்ட னர். இதனால் பிற்பகல் 2 மணி வரை மக்களவை முடங்கியது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.