தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ. 67,452 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து
13 Aug 2026, 9:40 pm

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ. 67,452 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து

சென்னை, ஆக. 13 -முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னையில் நடைபெற்ற ‘தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026-’இல், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு பெருக்கத்தை மையமாகக் கொண்டு ரூ. 67,452 கோடி மதிப்பிலான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.இதில், 55 புதிய திட்டங்களும், 50 விரிவாக்கத் திட்டங்களும் அடங்கும். இவற்றின் மூலம் 1,06,998 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் மொத்தம் ரூ.1,02,514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 1,21,788 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.விண்வெளி, மின்னணுவியல், மோட்டார் வாகனம், ஜவுளி உள்ளிட்ட துறைகளில் முன்னணி நிறுவனங்களுடன்ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன.தூத்துக்குடியில் தனியார் ஏவுகலன் உற்பத்திக்காக ஸ்கைரூட்ஏரோஸ்பேஸ் (ரூ. 250 கோடி), அக்னிகுல் காஸ்மோஸ் (ரூ. 400 கோடி) ஆகியவையும், கிருஷ்ணகிரியில் அல்ட்ராவயலட் நிறுவனம் (ரூ. 779 கோடி) மின்சார வாகன ஆலையையும் அமைக்கவுள்ளன. சூப்பர் மைக்ரோ (ரூ. 477 கோடி), ஒய்கேகே(ரூ.1,651 கோடி), ஜெர்மனியின் பிட்ஸர் (BITZER) (ரூ.300 கோடி) ஆகியவை புதிய திட்டங்களைத் தொடங்குகின்றன. ஜே.கே. டயர் (ரூ.5,143 கோடி), டைம்லர் (ரூ.4,000 கோடி), ஆவிட் குழுமம் (ரூ.7,000 கோடி) ஆகியவை பெரிய அளவிலான விரிவாக்கங்களை அறிவித்துள்ளன.

கஜகஸ்தான், நியூசிலாந்து, ரஷ்யா (Sberbank) ஆகிய நாடுகளின் அமைப்புகளுடன் 7 நிறுவன ரீதியான புரிந்துணர்வு ஒப்பந்த ங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இணையப் பாதுகாப்பு, செயற்கைநுண்ணறிவு பயிற்சிக்காக டிட்கோ, பாஷ் நிறுவனத்துடனும், கோயம்புத்தூரில் செமிகண்டக்டர் பயிற்சி மையம்அமைக்க வாவ்செமி(WOWsemi) நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. வால்மார்ட் விரிவாக்கத் திட்டத்திற்காக ‘ஐடியா டூ இம்பாக்ட் ஃபவுண்டேஷன்’ உடனும் ஒப்பந்தம்மேற்கொள்ளப்பட்டு, 9 மாவட்டங்களில் உள்ளூர் உற்பத்தியாளர்களின் சந்தை வாய்ப்பு விரிவுபடுத்தப்படும்.

ரூ. 4,476 கோடி மதிப்பில் எல்&டி,ஸ்ரீசிமெண்ட்ஸ் உள்ளிட்ட 8 புதியதிட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதோடு, திருநெல்வேலியில் விக்ரம் சோலார் உள்ளிட்ட ரூ. 2,676 கோடி மதிப்பிலான 5 முடிவடைந்த திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டன. திருச்சியில் ரூ. 350 கோடியில் டிஷ்யூ காகித உற்பத்தி, வல்லம் வடகலில் ரூ. 250 கோடியில் ஏரோஹப் வளாகம், சிப்காட்டின் 11 புதியகட்டிடங்கள் என மொத்தம் ரூ. 777.74 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புத் திட்டங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். 9 நிறுவனங்களில் தேர்வான 20 பேருக்கு பணிநியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.