அமெ. வரி விதிப்பால் தமிழக தொழில்களுக்கு கடும் பாதிப்பு
11 Jan 2026, 2:59 pm
<p><strong>அமெ. வரி விதிப்பால் தமிழக தொழில்களுக்கு கடும் பாதிப்பு</strong></p>
<p>சென்னை, ஜன. 11 - அமெரிக்க வரி விதிப்பால் தமிழ் நாட்டின் தொழில்துறைக்கு மிகக் கடு மையான பாதிப்பு ஏற்படும் என்றும் அதைத் தடுக்கும் வகையில் ஒன்றிய அரசு சிறப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜன.28 ஆம் தேதி தொடங்க உள் ளது என ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வ மாக அறிவித்துள்ளது. ஜன.28 ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கும் இந்த கூட்டத் தொடர், ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடை யும். பட்ஜெட் ஆலோசனை இந்நிலையில், ஒன்றிய அரசின் பட்ஜெட்டிற்கான முன்னோடி ஆலோ சனைக் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, நிதித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டி. உதயச்சந்திரன், இணைச் செயலாளர் (பட்ஜெட்) பிரத்திக் தயாள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒன்றிய பட்ஜெட்டில் மாநி லங்களின் கருத்துகள் உரிய முறை யில் பரிசீலிக்கப்பட வேண்டும் என வலி யுறுத்தினார். தமிழ்நாட்டில் செயல் படுத்தப்பட வேண்டிய முக்கியமான உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங் களுக்கு தேவையான நிதியை ஒன்றிய அரசு உரிய காலத்தில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார். மெட்ரோ தொகை ரூ.9,500கோடி குறிப்பாக, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தும், ஒன்ற ரை ஆண்டுகளாக அதன் பங்குத்தொகை யான 9,500 கோடி ரூபாய் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்றும், இதனால் தமிழக அரசே கடன் எடுத்து அந்த நிதியை முன்னெடுத்து வரு வதாகவும் தெரிவித்தார். இதன் காரண மாக தமிழக அரசின் கடன் சுமை அதிகரித்து, மாநிலத்தின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பில் கடன் விகிதம் எதிர்மறையாக பாதிக்கப் பட்டுள்ளதாகவும், இதனால் மாநி லத்திற்கு அனுமதிக்கப்படும் கடன் வரம்பு குறைந்து வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு உடனடியாக ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும், தேசிய நெடுஞ்சாலை திட்டங்களில் தமிழ்நாட்டுக்கு கூடுதல் முன் னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார். குறிப்பாக, தாம்பரம்-செங்கல்பட்டு உயர்மட்ட சாலை மற்றும் செங்கல்பட்டு-திண்டி வனம் சாலைத் திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும் என கோரினார். அமெரிக்க வரியால் பெரும் அபாயம் அமெரிக்க அரசின் அதிக வரி விதிப்பால் தமிழகத்தின் ஏற்றுமதித் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தாகவும், தமிழகத்தின் மொத்த ஏற்றுமதி யில் சுமார் 31 சதவீதம் அமெரிக்கா வுடன் நடைபெறுவதால், இந்த வரி விதிப்பு ஜவுளி உள்ளிட்ட முக்கிய தொழில்துறைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாக ஜவுளித் துறையில் மட்டும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளதாகவும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறு வனங்கள் மூடப்படும் நிலை உருவாகி யுள்ளதாகவும் அவர் கூறினார். இதைத் தடுக்கும் வகையில், வட்டி மானியம், ஏற்றுமதி ஊக்கத்தொகை மற்றும் வரிச்சலுகை உள்ளிட்ட சிறப்பு சலுகை தொகுப்பை ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஜிஎஸ்டி வரி குறைப்பால் தமிழ கத்திற்கு சுமார் 10,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை ஈடு செய்ய இழப்பீட்டு முறை யை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். அதே போல், தீங்கு விளைவிக்கும் பொருட் களுக்கு ஜிஎஸ்டி வரியை அதி கரிக்க வேண்டும் எனவும் அவர் வலி யுறுத்தினார். நூறு நாள் வேலைத் திட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் காரணமாக அந்தத் திட்டம் செயலிழக்கும் நிலையில் உள்ளதாகவும், இதனால் மாநிலங்களின் நிதிச்சுமை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறி, அந்த மாற்றங்களை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான 3,112 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூன்றாம் கட்ட பணிகளுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்து 2,283 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கான 3,548 கோடி ரூபாய் நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் என அவர் கோரினார். மொத்தமாக, ஒன்றிய அரசு தமிழ கத்தின் நிதிச் சுமையை குறைக்கும் வகை யில் இந்த பட்ஜெட்டில் தேவையான நிதி ஒதுக்கீடுகளை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் வலி யுறுத்தப்பட்டது.</p>
