தீக்கதிர் முக்கிய செய்திகள்
13 May 2026, 1:20 am

உதயச்சந்திரன், அமுதா காத்திருப்பு பட்டியலில் வைப்பு

சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் தலைமைச் செயலர் முருகானந்தம் வருவாய்த்துறை செய லராக மாற்றப்பட்டு உள்ளார். ஐஏஎஸ் அதி காரிகள் உதயச்சந்திரன், அமுதா ஆகியோர் காத்தி ருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். நிதித்துறை செயலராக சித்திக், சுற்றுலாத் துறை செயலராக ஸ்வர்ணா, டாஸ்மாக் நிர்வாக இயக்கு நராக நந்தகுமார் ஐஏஎஸ் ஆகியோர் நியமனம் செய் யப்பட்டுள்ளனர்.

அமமுக எம்எல்ஏ நீக்கம்

சென்னை: சட்ட மன்றத்தில் கட்சியின் நிலைப்பாட்டை மீறி முதல மைச்சர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த மன்னார்குடி எம்.எல்.ஏ எஸ். காமராஜ், அம்மா மக்கள் முன்னேற் றக் கழகத்திலிருந்து நீக்கப் பட்டுள்ளார்.

தமிழக மீனவர்கள் 6 பேர் கைது: ஒன்றிய அரசுக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் 6 தமிழக மீன வர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை கடந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக அவர் குறிப் பிட்டுள்ளார். ஏற்கெனவே 54 தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பதுடன், 264 மீன்பிடி படகு களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழக மீனவர்களையும், அவர்களது படகு களையும் உடனடியாக மீட்க தேவையான தூதரக நடவடிக் கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

65 போதைப் பொருள் தடுப்புப் படை நிலையங்கள்

சென்னை: மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 காவல் நிலையங் களும், 9 மாநகர காவல் மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 28 காவல் நிலையங்களுமாக மொத்தம் 65 போதைப் பொருள் தடுப்புப் படை நிலையங்கள் அமைக்க அரசாணை வெளி யிடப்பட்டது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் நாளில் இதற்கு முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் செவ்வா யன்று தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சி ஆகிய துறைகளின் செயல் பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களி லும் குடிநீர் வழங்கலில் உள்ள இடர்பாடுகளை போர்க்கால அடிப்படையில் களைந்து லாரிகள் மற்றும் புதிய ஆழ்துளைக் கிணறுகள் மூலம் சீரான குடிநீர் விநியோகம் செய்திட உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் திங்கட்கிழமை தோறும் குடிநீர் விநியோகத்தை ஆய்வு செய்து தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறும், மழைக் காலத்தை முன்னிட்டு வெள்ளத்தடுப்பு மற்றும் தூர்வாரும் பணிகளை துரிதப்படுத்துமாறும் உள்ளாட்சி அமைப்பு களுக்கு அறிவுறுத்தினார்.