புதிய அரசு பொறுப்பேற்பு தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
16 May 2026, 10:45 pm

புதிய அரசு பொறுப்பேற்பு தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை, மே 16 - முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான இட மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வரு கின்றன.

மாநில மனித உரிமைகள் ஆணையத் தின் செயலாளர் மற்றும் வேளாண்மைத் துறை இயக்குநர் பணியிடங்கள் ஓராண்டு காலத்திற்கு தற்காலிகமாக மறுசீரமைக்கப் பட்டு உள்ளன. வேளாண்மைத்துறை இயக்குநராக இருந்த பி. முருகேஷ், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக மீன்வளத்துறை மேலாண்மை இயக்குநராக இருந்த கே.வி. முரளிதரன் ஐஏஎஸ் வேளாண்மை இயக்கு நர் பொறுப்பேற்கவுள்ளார்.

மாவட்ட நிர்வாகத்திலும் மாற்றங்கள் அரங்கேறியுள்ளன. தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை இயக்குநராக இருந்த சி. முத்துக்குமரன் கரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பயிற்சி நிறைவுசெய்த இளம் துணை ஆட்சியர்களான எப். அப்துல் ரசிக் பொன்னேரி வருவாய் கோட்டாட்சிய ராகவும், வி. நல்லசிவன் ஸ்ரீபெரும்புதூர் வரு வாய் கோட்டாட்சியராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

மூத்த அதிகாரி பிரதீப் யாதவ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலா ளராகவும், டி.என். வெங்கடேஷ் கைத்தறி மற்றும் கதர்த் துறையின் முதன்மைச் செய லாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உயர்கல்வித் துறையின் முன்னாள் செயலாளர் பி. சங்கர் வேளாண்மை உற்பத்தி ஆணையராகப் பொறுப்பேற்கிறார். ஜி. லதா கூட்டுறவுச் சங்கங்கள் பதிவாளராக வும், பி. காயத்ரி கிருஷ்ணன் சமூகப் பாது காப்புத் திட்ட இயக்குநராகவும், தீபக் ஜேக்கப் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.