பதவி உயர்வு உரிமையை மறுப்பதா?
25 Jun 2026, 1:16 am
<p><strong>பதவி உயர்வு உரிமையை மறுப்பதா?</strong></p><p>திருப்பூர், ஜூன் 24– சாலைப் பணியாளர் களின் பதவி உயர்வு உரி மையை மறுப்பதை கண் டித்து தமிழ்நாடு நெடுஞ்சா லைத்துறை சாலைப் பணி யாளர் சங்கத்தினர் போராட் டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் உட் கோட்டங்களை சேர்ந்த சாலைப் பணியாளர் களுக்கான மூதுரிமை மற்றும் பதவி உயர்வு உரிமையை மறுக்கும் வகையில் வெளியி டப்பட்டுள்ள முதுநிலை பட்டியலை ரத்து செய்ய வேண்டும். அனைத்து சாலைப் பணி யாளர்களும் பயன்பெறத்தக்க வகையில் 2017 இல் வெளியிடப்பட்ட முதுநிலைப் பட்டியலை நிலைநிறுத்தி நடைமுறைப்ப டுத்த வேண்டும். நீதிமன்ற தீர்ப்பு விவகா ரத்தில் நீதிமன்ற மேல்முறையீடு அல்லது மனு சீராய்வு உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவ டிக்கைகளை மேற்கொள்ள தவறிய தாரா புரம் கோட்டப் பொறியாளரை (நெ.க.ம.ப.) கண்டித்து புதனன்று தாராபுரம் கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு போராட் டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு, நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் கோட் டத் தலைவர் கே.வெங்கிடுசாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் வீ.தங்கவேல் வரவேற்றார். மாநிலத் தலைவர் மா.பால சுப்பிரமணியன் துவக்கி வைத்து பேசி னார். கோரிக்கைகளை விளக்கி கோட்டச் செயலாளர் இல.தில்லையப்பன் பேசினார். மாநில பொதுச்செயலாளர் ஆ.அம்சராஜ் நிறைவுரையாற்றினார். இதில், தாராபுரம், மூலனூர், உடுமலை, மடத்துக்குளம், வெள் ளகோவில் உள்ளிட்ட உட்கோட்டத்தை சார்ந்த சாலைப் பணியாளர்கள் பலர் பங் கேற்றனர். முடிவில், கோட்டப் பொருளாளர் சு.சிவராசு நன்றி கூறினார்.</p>
