சிஏஎஸ் விவகாரம்: உயர்கல்வித்துறை அமைச்சருடன் ஆசிரியர் சங்கங்கள் ஆலோசனை விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு!
12 Jun 2026, 10:40 pm

சிஏஎஸ் விவகாரம்: உயர்கல்வித்துறை அமைச்சருடன் ஆசிரியர் சங்கங்கள் ஆலோசனை விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு!

சென்னை, ஜூன் 12- கல்லூரி பேராசிரியர்களுக்கான பணி மேம்பாட்டுத் திட்டம் தொடர்பாக, உயர்கல்வித்துறை அமைச்சர் பி. விஸ்வ நாதனுடன் ஏயுடி மற்றும் மூட்டா சங்கப் பொறுப்பாளர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். புதனன்று (ஜூன் 10) ஏயுடி மற்றும் மூட்டா சங்கங்களின் நிர்வாகிகள் உயர்கல்வித்துறை அமைச்சர் பி. விஸ்வ நாதனை நேரில் சந்தித்து, பணி மேம்பாட்டுத் திட்டத்தை உடனடியாக நடை முறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். சங்கங்களின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர், உடனடியாக உயர்கல்வித்துறைச் செயலாளர் வி. அருண் ராய், கல்லூரிக் கல்வி ஆணையர் பி. பொன்னையா, இணை இயக்குநர் பேராசிரியர் ராமன் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகளை நேரில் அழைத்தார். இதனைத் தொடர்ந்து, அன்று சங்கப் பொறுப்பாளர்களுடன் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பணி மேம்பாட்டுத் திட்டம் குறிப்பது மட்டுமே முதன்மையாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சங்கங்களின் சார்பாகப் பின்வரும் நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளையும் கோரிக்கை களையும் விரிவாக எடுத்துரைத்தனர்: ஏயுடி சங்கத்தலைவர் காந்தி ராஜ், பொருளாளர் சார்லஸ் மற்றும் மண்டலப் பொறுப்பாளர்கள் பேராசிரியர்கள் ஆனந்த், இராஜசிம்மன், அருண்விவேக். மூட்டா சங்கப்பொதுச் செயலாளர் செந்தாமரைக்கண்ணன், பொருளாளர் இராஜசேகர் மற்றும் மண்டலப் பொறுப்பாளர் பேராசிரியர் சிவஞானம். ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களின் நியாயமான உணர்வுகளையும், கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர், தகுதியுள்ள பேராசிரியர்களுக்குப் பணி மேம்பாடு வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் மிக விரை வாக முடித்து வைக்கப்படும் என்ற உறுதி யையும் அவர் அளித்தார். அமைச்சரின் இந்த உடனடி நட வடிக்கையும், அதிகாரிகளுடனான ஆலோசனையும் தங்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளதாகத் தெரிவித்த சங்க நிர்வாகிகள், அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.