தமிழ்நாட்டில் வெப்ப அலை நீடிக்கும் ; மழைக்கும் வாய்ப்பு
22 May 2026, 9:19 pm

தமிழ்நாட்டில் வெப்ப அலை நீடிக்கும் ; மழைக்கும் வாய்ப்பு

சென்னை, மே 22- தமிழகத்தில் கடுமையான வெயில் மற்றும் வெப்ப அலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தகவல்படி, மாநிலத்தின் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெப்பநிலை 39 டிகிரி செல்ஸியஸ் அளவை தாண்டியுள்ளது.

சென்னையில் கடந்த புதன்கிழமை 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது; இது இந்த கோடைகாலத்தின் பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலையாகும்.

இந்த கடுமையான வெப்ப நிலை மேலும் தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் வெப்ப அலை நீடிக்கக்கூடும். பகல் நேரங்களில் அதிகப்படியான வெப்பநிலையுடன் காற்றில் ஈரப்பதமும் அதிகமாக இருக்கும் என்பதால், இப்பகுதிகளில் பொதுமக்கள் கடும் அசௌகரியங்களைச் சந்திக்க நேரிடும்.

வெயிலின் தாக்கம் நீடித்தாலும், மே 23 முதல் மாநிலத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையும், மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்” என அதில் கூறப்பட்டுள்ளது.