முந்தய பக்கம்

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப நாட்கள் அதிகரிக்கும் என எச்சரிக்கை!

30 Apr 2026, 12:24 pm
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப நாட்கள் அதிகரிக்கும் என எச்சரிக்கை!

இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் கடுமையான காலநிலை மாற்ற தாக்கங்கள் அதிகரிக்கும் என CEEW அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஆய்வின் படி, நாட்டில் ஆண்டுதோறும் வழக்கத்தை விட கூடுதலாக 15 முதல் 40 நாட்கள் வரை கடுமையான வெப்ப அலை நிலவும் அபாயம் உள்ளது. வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பத்துடன் காணப்படும் இரவுகளின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு 20 முதல் 40 நாட்கள் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கனமழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கையும் 10 முதல் 30 நாட்கள் வரை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வு கூறுகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை அபாயங்கள் அதிகரிக்கும் அபாயமும் உருவாகியுள்ளது.

குறிப்பாக, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த காலநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் ஆய்வு கணித்துள்ளது.

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டியது அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram