தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வர்க்கப் போராட்டத்தின் நம்பிக்கையாய் நெசவாளர் போராட்டம் - பி. மாரியப்பன்

30 Oct 2026, 8:39 pm
வர்க்கப் போராட்டத்தின் நம்பிக்கையாய் நெசவாளர் போராட்டம் - பி. மாரியப்பன்

வர்க்கப் போராட்டத்தின் நம்பிக்கையாய் நெசவாளர் போராட்டம் - பி. மாரியப்பன்

இந்தியாவிலேயே இலவச வேட்டி சேலை வழங்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். கைத்தறி நெசவாளர்களுக்கு வேலையும், வறிய வர்களுக்குப் புத்தா டையும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில்,1983இல் அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர் இத்திட்டத்தைத் தொடங்கினார். தற்போது பொங்கல் பண்டிகைக்கு 1.73 கோடி சேலைகளும் 1.73 கோடி வேட்டிகளும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படு கின்றன. தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 2,664 கைத்தறி, 11,124 பெடல் தறி, 41,983 விசைத்தறி நெசவாளர்கள் என 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், சுமார் 3 லட்சம்பேர் மறைமுகமாகவும் பயனடை கின்றனர்.

நெசவாளர்களின் வாழ்நிலை

நூலோடு ஒட்டிய பஞ்சைப் போல, நெசவாளர்களோடு பட்டினியும் பஞ்சமும் ஒட்டியே இருக்கின்றன. ஒரு கிலோ அரிசி விலை நூறு ரூபாயை நெருங்கும்இன்றைய நிலையில், நாளொன்றுக்கு கிடைத்து வந்த ரூ.190 கூலியைச் சிறிது உயர்த்துவதற்கே சமீபத்தில் 150 நாட்கள்போராட வேண்டியிருந்தது.

விருதுநகர் மாவட்டத்தில் இராஜ பாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், புனல்வேலி, முத்துச்சாமிபுரம், சேத்தூர்,சொக்கநாதன்புத்தூர், சுந்தரபாண்டி யம் ஆகிய பகுதிகளில் 29 கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 3,501 பெடல்தறிகள் இலவசச் சேலை உற்பத்தியில் ஈடுபடுகின்றன. இதனால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பயனடை கின்றனர். 15 ஆண்டுகளுக்கு மேலாகஉற்பத்தி செய்யப்பட்ட ஜனதா ரகச்சேலை ஒன்றுக்கு ரூ.103.95 கூலி (நெசவுக்கு முந்தைய கூலி ரூ.28, நெசவுக் கூலி ரூ.75.95) வழங்கப்பட்டது. செலவுகள் போக நெசவாளருக்குக் கிடைத்ததுசேலைக்கு ரூ.63 மட்டுமே; நாளொ ன்றுக்கு மூன்று சேலைகளே நெய்ய முடியும்.

புதிய ரகமும் பிரச்சனைகளும்

ஆண்டுதோறும் ஏப்ரலில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நூல் பெறப்பட்டு, மே இறுதியில் உற்பத்தி தொடங்கி டிசம்பர் வரை நடைபெறும். 2026இல்ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் உற்பத்திப் பணிகள் தாமதமாகின. புதிதாகப் பொறுப்பேற்ற தமிழக வெற்றிக் கழக அரசு, பொங்கலுக்குப் புதிய ரகச் சேலை, வேட்டி வழங்கப்படும் என ஜூலை 2 அன்று அரசாணை வெளியிட்டது. நெசவாளர்களிடம் எந்தக் கருத்தும் கேட்காமல் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை உணர அரசு தவறியது. மே மாதம் தொடங்கவேண்டிய உற்பத்திக்கு, ஆகஸ்டில்தான் நூல் கொள்முதல் டெண்டர் விடப்பட்டது. ஜூனில் “நூல் கொடு, வேலை கொடு” என்று தொடங்கிய போராட்டம்,“உழைப்புக்கேற்ற ஊதியம் கொடு” என அக்டோபர் வரை நீடித்தது.

போராட்டம் தொடங்கியது

ஜூன், ஜூலை மாதங்களில் உடனடி வேலை கோரி சிஐடியு சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரிலும், ஏஐடியுசி சார்பில் இராஜபாளையத்திலும் போராட்டங்கள் நடைபெற்றன. புதிய ரக அறிவிப்புக்குப் பின், நெசவாளர்களிடம் கையிருப்பில் உள்ள பழைய ரகச் சேலைகளைகொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் சேர்ந்து, போராட்டம் விரிவடைந்தது. வேலையில்லாக் காலநிவாரணம், தறிகளைப் புதிய ரகத்துக்கு மாற்றும் செலவை அரசே ஏற்பது,கூடுதல் கூலி ஆகிய கோரிக்கைகளு டன் விருதுநகர் மாவட்டக் கூட்டுறவுச் சங்க நெசவாளர் பிரதிநிதிகள் ஜூலை 15 அன்றுசென்னையில் கைத்தறித் துறை அமைச்சர் விஜய் பாலாஜியைச் சந்தித்து மனு அளித்தனர்.

தீவிரமடைந்த போராட்டம்

ஆகஸ்ட் இறுதி வாரம் வரை நூல் வழங்கப்படாததால், சிஐடியு கைத்தறித்தொழிலாளர் சங்கம் சார்பில் சேத்தூர் பேருந்து நிலையம் அருகே 300க்கும் மேற்பட்டோர் தட்டேந்திப் போராட்டம் நடத்தினர்.அதில் கோரிக்கைகள் இறுதி செய்யப்பட்டன:

1. புதிய ரகச் சேலை ஒன்றுக்கு ரூ.250 கூலி

2. பெடல் தறிகளை மாற்றியமைக்க ரூ.10,000

3. வேலையில்லாக் காலத்துக்கு மாதம்ரூ.10,000 நிவாரணம்

4. கையிருப்பில் உள்ள ஜனதா ரகச் சேலைகளைக் கொள்முதல்செய்தல்இவையே அனைத்துப் போராட்டங்களிலும் பிரதான கோரிக்கைகளாயின. சட்டமன்றத்தில் இப்பிரச்சனை எழுப்பப்பட்ட பின், ஆகஸ்ட் 25 அன்று நூல் கொள்முதலுக்கு அரசாணை வெளி யானது.

புயலான புனல்வேலி

புனல்வேலியில் மட்டும் 550 பெடல்தறி நெசவாளர்கள் உள்ளனர். மூன்று மாதம் வேலையின்றிப் பட்டினியில் தவித்த அவர்கள், ஆகஸ்ட் 29 அன்று கூட்டுறவுச் சங்கம் முன் கஞ்சித் தொட்டி திறந்தனர். தீப்பந்த ஊர்வலம், சங்க முற்றுகை, தொடர் கஞ்சித் தொட்டி என புனல்வேலி போராட்டக் களமானது.ஒவ்வொரு முறையும் கைத்தறி, காவல்,வருவாய்த் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி “பத்து நாள் அவகாசம் கொடுங்கள்” என்று கேட்பதே வழக்கமானது.

சட்டமன்றத்தில் பட்டிமன்றம்

நெசவாளர் பிரச்சனையைப் பேச வேண்டிய சட்டமன்றத்தில், நான்கு முழ வேட்டி சிறந்ததா, எட்டு முழ வேட்டி சிறந்ததா என்று பட்டிமன்றம் போல விவாதம் நடந்த அவலம் அரங்கேறி யது. ஆகஸ்ட் 1 மானியக் கோரிக்கை யின்போது அமைச்சர் 10 சதவீதக் கூலி உயர்வைஅறிவித்தார். ரக மாற்றத்திலும் கூலி நிர்ணயத்திலும் நெசவாளர்களின் கருத்துக் கேட்கப்படாததால் பொருத்தமற்ற கூலி அறிவிக்கப்பட்டு, அதனால் போராட்டம் தீவிரமடைந்தது.கூலி நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 8 அன்று சிஐடியு சார்பில் செட்டியார்பட்டியில் மறியல் நடந்தது. அதன்பின் சேலைக்கு ரூ.114.80 தற்காலிகக் கூலி அறிவிக்கப்பட்டது; நெசவாளர்கள் அதை ஏற்கவில்லை. வேலை தராத கூட்டுறவு சங்கங்களைத் திறக்க விடமாட்டோம் என்ற போராட்டத்தால் பல சங்கங்கள் மூடப்பட்டன. செப்டம்பர் 10 அன்று கைத்தறித் துறை உயர்அதிகாரிகள் புனல்வேலி கூட்டுறவுசங்கத்தில் அனைத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடமும் கருத்துக் கேட்டனர். புதிய ரகத்தின் செலவு, உற்பத்தி நேரம்உள்ளிட்ட விவரங்களை நெசவாளர்கள் எடுத்துரைத்த பிறகே அதிகாரிகள் பிரச்சனையை உணரத் தொடங்கினர். கூலி நிர்ணயத்துக்கு ஐவர் குழு அமைக்கப்பட்டு, செப்டம்பர் 12 அன்றுஸ்ரீவில்லிபுத்தூரில் கருத்துக் கேட்டது. சேலைக்கு ரூ.250 கூலிவேண்டும் என்பதே அனைவரின் ஒரே குரலாக இருந்தது.

கஞ்சித் தொட்டியும் காவல்துறை வழக்கும்

நான்கு மாதம் வேலையில்லாத தால் திறக்கப்பட்ட கஞ்சித் தொட்டி22 நாட்கள் தொடர்ந்தது; முத்துச்சாமிபுரம், இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத் தூரிலும் திறக்கப்பட்டது. இந்த அவலம்தமக்கு அவமானம் என அரசோ அதிகாரிகளோ உணரவில்லை. மாறாக, தவெக நிர்வாகிகள் முன்னின்று புனல்வேலி சங்கத்தைத் திறந்து,பாவுகளை எடுத்து வேலையைத் தொடங்குமாறு மிரட்டினர். இதைக் கண்டித்த சிஐடியு கைத்தறிச் சங்க மாவட்டச் செயலாளர் ராமர், ஆறுமுகம் ஆகியோர் மீது, கூட்டுறவுச் சங்கத்தினர் அளித்த பொய்ப் புகாரில் நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.செப்டம்பர் 17 அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிஐடியு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் பங்கேற்றார்; ஆட்சியரிடம் கோரிக்கைகள் முறையிடப்பட்டன.

விரிவடைந்த போராட்டம்

செப்டம்பர் 17, 18 தேதிகளில் அனைத்து நெசவாளர்களும் வேலைநிறுத்தம் செய்தனர்; ஸ்ரீவில்லிபுத் தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செப்டம்பர் 19 அன்று இராஜபாளையத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து காவல் நிலையம் அருகே மறியல் செய்தன; 21அன்று கஞ்சித் தொட்டி போராட்டம் நடந்தது. செப்டம்பர் 22 அன்று அனைத்துச் சங்க நெசவாளர்களுமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காந்தி சிலையிலிருந்து வட்டாட்சியர் அலுவலகம் நோக்கிச் செல்ல முயன்றனர். அதிகாரிகள் நேரில் வந்து எழுத்துப்பூர்வ உறுதி அளித்ததால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. 23, 24 தேதிகளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் 6 ஊர் நெசவாளர் சமூகமும் போராடி யது. செட்டியார்பட்டியில் பாடை கட்டும் போராட்டம், சேத்தூர், ராஜபாளையம் சத்திரப்பட்டியில் ஆர்ப்பாட்டங்கள் எனச் சிஐடியு போராட்டங்கள் தொடர்ந்தன.

அமைச்சரின் திசைதிருப்பல்

செப்டம்பர் 25 அன்று சிவகாசி வருவாய்க் கோட்டாட்சியர் முன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஆனால், போராட்டம் முடிந்துவிட்டதாகவும், நெசவாளர்கள் நன்றி தெரிவித்ததாகவும் அமைச்சர் ஜெகதீஸ்வரி சமூக வலைதளங்களில் பரப்பியது நெசவாளர் களைக் கொதிப்படையச் செய்தது. போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்தனர்.

காலவரையற்ற காத்திருப்பு

புனல்வேலியில் போராடிய நெசவாளர்களை சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பாலபாரதி நேரில் சந்தித்தார். “சாப்பாட்டுச் செலவைவிடக் கூலி குறைவு; ஐந்து மாதமாக வேலையில்லை; விஷம் குடித்துச் சாவதுதான்வழி” என நெசவாளர்கள் கண்ணீரோடுகூறினர். “எல்லாப் போராட்டமும் நடத்திவிட்டோம்; அதிகம் போராடியதற்காக எங்கள் ஊரில் மட்டும் சேலைகளைக் கொள்முதல் செய்யாமல் பழிவாங்குகிறார்கள்” என ஒரு பெண்நெசவாளர் முறையிட்டார். அக்டோபர்5 முதல் சிபிஎம் சார்பில் காலவரை யற்ற காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் எனப் பாலபாரதி அறிவித்தார்.

அதன்படி இராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் அக்டோபர் 5 காலை 10 மணிக்கு 500க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் மதிய உணவுடன் திரண்டு, உறுதியான முடிவு தெரியும் வரை கலையமாட்டோம் எனக் காத்திருந்தனர். கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் எனச் சிபிஎம் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் அறிக்கைவெளியிட்டார். பாலபாரதி உள்ளிட்டோருடனும் நெசவாளர் பிரதிநிதிகளுட னும் கைத்தறித் துறை உதவி இயக்குநர் பேச்சுவார்த்தை நடத்தினார். அக்டோபர் 20க்குள் கூலி உயர்வு அரசாணை வெளியிடப்படும் என அவர் உறுதியளித்ததால்போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

போராட்டத்தின் வெற்றி

கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறாவிட்டாலும், இப்போராட்டம் தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. கையிருப்பு ஜனதா ரகச் சேலைகளைக் கொள்முதல் செய்யவேமுடியாது என்ற அரசையும் அதிகாரிகளையும் பணிய வைத்து, கூட்டுறவுச்சங்கங்கள் மூலம் 1,44,500 சேலைகளைக் கைத்தறித் துறை கொள்முதல் செய்தது. சட்டமன்றத்தில் அறிவித்த கூலியை மறுபரிசீலனை செய்ய வைத்து, அக்டோபர் 16 அன்று சேலைக்கு ரூ.125.72 என உயர்த்தி அறிவிக்க வைத்தது இப்போராட்டம்.குறைந்தபட்சக் கூலி என்றால் எவ்வளவு என்று கேட்கும் நிலையில்தான் நெசவாளர்களின் வாழ்க்கை உள்ளது. அவர்களை அமைப்பாக்கி, சங்கமாகஅணிதிரட்டிக் கோரிக்கைகளை வென்றெடுக்கும் பயணத்தில் செங்கொடி இயக்கம் தொடர்ந்துமுன்னேறும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.