தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழகத்தில் ரூ. 18,600 கோடி முதலீடு எல்&டி நிறுவனத்துடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

5 Jun 2026, 12:59 am
தமிழகத்தில் ரூ. 18,600 கோடி முதலீடு எல்&டி நிறுவனத்துடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழகத்தில் ரூ. 18,600 கோடி முதலீடு எல்&டி நிறுவனத்துடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை, ஜூன் 4 - தமிழகத்தில் ரூ. 18 ஆயிரத்து 600 கோடி மதிப்பீட்டில் சுமார் 8 ஆயிரத்து 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மூன்று முக்கியத் திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக ‘லார்சன் அண்ட் டூப்ரோ’ நிறுவனம் அறிவித்துள்ளது.

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழக அரசு பொறுப்பேற்ற பின்னர் தொழில் துறையில் மேற்கொள்ளப்படும் முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ. 15,000 கோடி முதலீட்டில் தரவு மைய விரிவாக்கத் திட்டம் அமைக்கப்பட உள்ளது; இதன் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கோயம்புத்தூரில் ரூ. 2,500 கோடி முதலீட்டில் மின்னணுப் பொருட்கள் உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட உள்ளது; இதன் மூலம் 2,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி ‘எல் அண்ட் டி’ கப்பல் கட்டும்தளத்தை விரிவாக்கம் செய்ய ரூ. 1,100 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது; இதன் மூலம் சுமார் 5,700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

2036-ஆம் ஆண்டிற்குள் தமிழகப் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்ற முதலமைச்சரின் இலக்கிற்கு இம்முதலீடுகள் முக்கிய மைல்கல்லாக அமையும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் தமிழக தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, தலைமைச் செயலாளர் சாய்குமார், தொழில் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விஜயகுமார், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குனர் அலர்மேல்மங்கை ஆகியோர் கலந்துகொண்டனர்.

‘எல் அண்ட் டி’ நிறுவனத் தரப்பில் அதன் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் மற்றும் முன்முயற்சிகள் மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் கே.ஜி. சத்யநாராயணன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.