தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதிய மருத்துவக் காப்பீடு திட்ட குளறுபடிகளை சரி செய்க!

1 hour before
புதிய மருத்துவக் காப்பீடு திட்ட குளறுபடிகளை சரி செய்க!
<p><strong>புதிய மருத்துவக் காப்பீடு திட்ட குளறுபடிகளை சரி செய்க!</strong></p><p>சென்னை, ஜூலை 8 – புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை சரி செய்து, புதிய அரசாணை வெளியிடக் கோரி புதனன்று (ஜூலை 8) தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை (என்எச்ஐஎஸ்) அறிவித்துள்ளது. இதற் கான அரசாணை (எண் 123, 24. 6.2026) பெருத்த ஏமாற்றமளிக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் கட்டணமில்லா மருத்துவ காப்பீட்டிற்கு பல்லாயிரம் கோடி ரூபாய்களை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பிரி மீயமாக செலுத்தினர். அரசு நிர்ணயித்த தொகையில் பாதியளவு கூட, காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பெற முடியவில்லை. இது தொடர்பான புகார்கள் மீது அரசும், காப்பீட்டு நிறுவனங்களும் போதிய நட வடிக்கை எடுக்கவில்லை. எனவே, புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். இத்திட்டத்தில் அரசு ஊழியர்களின் பெற்றோர், திருமணமாகாத மகன், மகள், கணவரை இழந்தவரின் மகளையும் சேர்க்க வேண்டும். கட்டணமில்லா சிகிச்சை முறையை உத்தரவாதப்படுத்த வேண்டும், காப்பீட்டு திட்ட பயனா ளிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். உயர் சிகிச்சைக்கான தொகையினை உயர்த்த வேண்டும்; அதிகபட்ச உச்சவரம்பு இருக்க கூடாது. புறநோயாளிகள் சிகிச்சையையும் முழுமையாக இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். அருகிலுள்ள மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பெற அனுமதிப்ப தோடு, அதற்கான முழுத் தொகையையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 18 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகங்கள், அரசு அலு வலகங்கள் முன்பு இந்த ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்லா யிரக்கணக்கான ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனொரு பகுதியாக, நந்தனம் பேராசிரியர் க.அன்பழகன் நிதித்துறை வளாகத்தில் மாவட்ட துணைத் தலைவர் சு. கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொரு ளாளர் ச.டேனியல் ஜெயசிங், மாவட்டச் செயலாளர் முத்து குமாரசாமி வேல், பொருளாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.