தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 7 முதல் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க மே 29 கடைசி நாள்

8 May 2026, 12:36 am
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில்  மே 7 முதல் மாணவர் சேர்க்கை  விண்ணப்பிக்க மே 29 கடைசி நாள்
<p><strong>அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 7 முதல் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க மே 29 கடைசி நாள்</strong></p><p>சென்னை, மே 7- தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு இளநிலை பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் வியாழனன்று (மே 7) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.48 மற்றும் பதிவுக்கட்டணம் ரூ.2 என மொத்தம் ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது, அவர்கள் பதிவுக்கட்டணமான ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது. சொந்தமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு உதவும் வகையில், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் ‘சேர்க்கை உதவி மையங்கள்’ அமைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களைப் பதிவு செய்ய மே 29 கடைசி நாளாகும். சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 044-24343100 மற்றும் 24342011 ஆகிய எண்களில் கல்லூரி கல்வி இயக்ககத்தின் உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளலாம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த உதவி மையம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.