தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழக அரசின் மொத்தக் கடன் ரூ. 13.18 லட்சம் கோடி!

16 Jun 2026, 9:33 pm
தமிழக அரசின் மொத்தக் கடன்  ரூ. 13.18 லட்சம் கோடி!

தமிழக அரசின் மொத்தக் கடன் ரூ. 13.18 லட்சம் கோடி!

வெள்ளை அறிக்கையில் தகவல்

சென்னை, ஜூன் 16 - தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவி யேற்ற ச. ஜோசப் விஜய், தமி ழக அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி நிதி நிலை குறித்த- 21 பக்க வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் செவ்வாய்க்கிழமை வெளி யிட்டார்.

இதில், தமிழக அரசின் உண்மையான மொத்தக் கடன் அளவு ரூ. 13.18 லட்சம் கோடியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த 13 லட்சத்து 18 ஆயி ரம் கோடி ரூபாய் மொத்த கடனில் ரூ. 10 லட்சம் கோடி நேரடி கடன் என்றும், எஞ்சிய 3 லட்சத்து 18 ஆயிரம் கோடி அரசு பொதுத்துறை நிறு வனங்களின் கடன் என்றும் கூறப்பட்டுள்ளது.

இரண்டு மடங்காக கடன் அதிகரிப்பு

60 ஆண்டுகளில் தமிழக அரசு வாங்கிய கடனை (ரூ. 5 லட்சம் கோடி) விட கடந்த திமுக ஆட்சியில் மட்டும் அதிக கடன் (ரூ. 5 லட்சம் கோடி) வாங்கப்பட்டு உள் ளது.

தமிழ்நாட்டில் ஒவ் வொரு தனிநபர் மீதும் 1 லட்சத்து 29 ஆயிரத்து 934 ரூபாய் கடன் உள்ளது. 2020-21 நிதியாண்டில் இது ரூ. 67,087 ஆக இருந்தது. ஐந்தே ஆண்டுகளில் தனி நபர் கடன் சுமை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள் ளது என்றும் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பீடு

மாநில மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பில் நிலுவை கடன் விகிதம் குஜ ராத்தில் 17.6 சதவிகிதமாக வும், மகாராஷ்டிராவில் 19.7 சதவிகிதமாகவும், கர்நாட கத்தில் 23.4 சதவிகிதமாக வும் உள்ள நிலையில், தமிழ் ழ்நாட்டில் அது 28.3 சதவிகித மாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

நிதியமைச்சரின் விளக்கம்

வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சர் மரிய வில்சன், கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் இருமடங்கு உயர்ந்து ள்ளதாகவும், வருவாய் பற் றாக்குறை வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொட்டுள்ளதாகவும் தெரி வித்தார். கொரோனா பெருந் தொற்று ஆண்டையும் தாண்டி வருவாய் பற்றாக் குறை அதிகரித்துள்ளது என்றும், சொந்த வரி வசூல் இதுவரை இல்லாத வகை யில் குறைந்துள்ளது என்றும் கூறினார். “வரவு ரூ. 100, செலவு ரூ. 145 என்று உள் ளது” என்பதுள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை யும் அவர் முன்வைத்தார்.

2.5% குறைந்த ஒன்றிய அரசின் நிதிப்பகிர்வு

ஒன்றிய அரசின் நிதிப் பகிர்வைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டிற்கான பங்கு பத்தாவது நிதிக்குழுவில் 6.64 விழுக்காடாக இருந்தது. இதனை ஒன்றிய அரசு 16-ஆவது நிதிக்குழுவில் 4.097 விழுக்காடாக குறைத்து விட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.