தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எப்.சி கட்டண உயர்வை நிறுத்தி வைத்த தமிழக அரசு

20 Feb 2026, 2:39 pm
எப்.சி கட்டண உயர்வை நிறுத்தி வைத்த தமிழக அரசு
<p><strong>எப்.சி கட்டண உயர்வை நிறுத்தி வைத்த தமிழக அரசு</strong></p> <p>நாமக்கல், பிப்.20- தமிழக அரசு எப்.சி கட்டண உயர்வை 3 மாதத்திற்கு நிறுத்தி வைத்த தால், வரும் 25 ஆம் நடைபெற இருந்த லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாநில &nbsp;லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஒன்றிய சாலை போக்குவரத்து மற் றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் &nbsp;மத்திய மோட்டார் வாகனசட்டத்தின் படி &nbsp;கடந்த நவம்பர் மாதம் &nbsp;15, 20 ஆண்டு களுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள லாரி &nbsp;மற்றும் பேருந்துகள் உட்பட அனைத்து &nbsp;வாகங்களுக்கான தகுதி சான்றிதழ் புதுப்பிக்க கட்டணத்தை 10 மடங்கு &nbsp;உயர்த்தியதால் லாரி உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு மாநில &nbsp;லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தின் அவசர செயற்குழு கூட்டம் கடந்த 17 ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெற் றது. இக்கூட்டத்தில் தகுதி சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணத்தை மற்ற மாநிலங் களை போன்று தமிழகத்தில் நிறுத்தி வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி நள்ளிரவு முதல் தமிழகம் &nbsp;முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட &nbsp;உள்ளோம் என மாநில லாரி உரிமையா ளர்கள் சம்மேளனத்தின் தலைவர் தன் ராஜ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மாநில லாரி உரிமை யாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் &nbsp;தன்ராஜ் வெள்ளியன்று வெளியிட் டுள்ள செய்தி அறிக்கையில், தமிழக அரசு உள்துறை செயலகத்திலிருந்து 3 &nbsp;மாதங்களுக்கு தகுதிச் சான்றிதழ்க ளுக்கான புதிய கட்டணம் வசூலிப் பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து பழைய கட்டணமான ரூ. 800 மட்டுமே செலுத்தி வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என &nbsp;அரசாணை குறிப்பிட்டுள்ளதால், வரும் &nbsp;25 ஆம் தேதி நடைபெற இருந்த லாரிகள் &nbsp;காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக் கப்படுவதாக அறிக்கையில் தெரிவித் துள்ளார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.