தமிழக அரசு பள்ளிகளில் ஒரு லட்சத்தை தாண்டிய மாணவர் சேர்க்கை!
28 Apr 2026, 12:31 pm
<p>தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2026–2027 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை 1 லட்சத்தை கடந்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>அதன்படி, 1ஆம் வகுப்பில் 97,737 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். 2ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 8,178 மாணவர்களும், மழலையர் வகுப்புகளில் 6,796 மாணவர்களும் சேர்க்கை பெற்றுள்ளனர்.</p><p>இதன் மூலம் மொத்தம் 1,12,711 மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
