தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜனநாயக உரிமையை வெட்டிச் சுருக்க முயல்வதா?

27 Sept 2026, 9:00 pm
ஜனநாயக உரிமையை வெட்டிச் சுருக்க முயல்வதா?

ஜனநாயக உரிமையை வெட்டிச் சுருக்க முயல்வதா?

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சிக்காலத்தின் போது இடதுசாரிக் கட்சிகளின் இடைவிடாத வலியுறுத்தலின்காரணமாகவே மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலைவாய்ப்பு உறுதி திட்டம், தகவல் அறியும்உரிமை சட்டம் போன்றவை கொண்டுவரப்பட்டன.

ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக 2019ஆம் ஆண்டுமோடி அரசு கொண்டுவந்த திருத்தத்தின்படி தகவல் ஆணையர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என்பது நீக்கப்பட்டு ஒன்றிய அரசு விதிகள் மூலம் தீர்மானிக்கும் என்று மாற்றப்பட்டது. தகவல் ஆணையரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் என்றும் தீர்மானிக்கப்பட்டது. தகவல்ஆணையர்களின் ஊதியத்தையும் ஒன்றிய அரசு தீர்மானிக்கும் என்றும் மாற்றப்பட்டது.

தகவல் ஆணையத்தை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கை இது என்று இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஜனநாயகத்தை மேலும்விரிவுபடுத்தியுள்ளது. இந்திய மக்களின் தகவல்அறியும் உரிமையை மட்டுமல்ல, கேள்வி கேட்கும் உரிமையையும் வலுப்படுத்தியுள்ளது. பல்வேறு மக்கள் நலவழக்குகளுக்கு வழிவகுத்துள்ளது. இந்த சட்டத்தை மேலும் வலுப்படுத்துவது மக்களாட்சியை வலிமையுள்ளதாக மாற்ற அவசியமான ஒன்று.

ஆனால் தமிழக வெற்றிக் கழக அரசு வெளியிட்ட ஒரு உத்தரவு அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. மாணவர்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகளின் போராட்டங்கள், காவல்நிலைய மரணங்கள், காவல்துறையின் துப்பாக்கிச்சூடுகள், சாதி மற்றும் சமூக மோதல்கள்உள்ளிட்டவற்றைப் பற்றி விபரங்கள் அறிய தகவல்அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிப்பதாக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள், மனித உரிமை அமைப்புகள், தமிழக அரசின் இந்த அராஜகஉத்தரவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்னணியில் இந்த உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் தலைமைச்செயலாளர் தலைமையில் நடந்தகூட்டத்தில் இடதுசாரி மற்றும் கரப்பான்பூச்சி அமைப்பு மாணவர்கள் செயல்பாடுகள் குறித்துகண்காணிக்குமாறு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை யோடு இதை இணைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது.காவல்நிலையச் சாவுகள், துப்பாக்கிச் சூடுகள் குறித்து தகவல்பெற இயலாது என்பது எந்த வகையிலும்ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. உத்தரவு வாபஸ்பெறப்பட்டுவிட்டது என்று கூறி அரசுத் தரப்பு சமாளிக்க முடியாது.இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னணி என்ன என்பதை விளக்கிட வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.