குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தமிழக அரசு தகவல்
12 Mar 2026, 4:20 pm
<p><strong>குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தமிழக அரசு தகவல்</strong></p>
<p>சென்னை, மார்ச் 12 - தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மாநில உள்துறை செயலர் தீரஜ்குமார் தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (மார்ச் 12) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உள்துறை செயலர் தீரஜ்குமார், சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மற்றும் சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோர் கலந்து கொண்டு மாநி லத்தின் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து விளக்கமளித்தனர். அப்போது பேசிய தீரஜ்குமார், தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக தெரி வித்தார். 2021ஆம் ஆண்டில் மாநிலத்தில் 1,597 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அது 2024-ஆம் ஆண்டில் 1,490 ஆகவும், 2025ஆம் ஆண்டில் 1,461 ஆகவும் குறைந்துள்ளதாக அவர் கூறினார். அதேபோல் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக கூறினார். 2021ஆம் ஆண்டில் 422 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2025ஆம் ஆண்டில் அது 401 ஆக குறைந்துள்ள தாக தெரிவித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்களில் விரை வான விசாரணை நடைபெற அரசு நட வடிக்கை எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் விரைவில் தீர்ப்புகள் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், கோவில் திருவிழாக்கள் மற்றும் பொதுநிகழ்ச்சிகளில் அசம்பா வித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க காவல்துறை மற்றும் அரசு இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் தெரி வித்தார். காவல்நிலைய மரணங்கள் எந்த சூழலிலும் ஏற்க முடியாதவை என்ற அவர், சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசார ணை நடைபெற்று வருவதாகவும், அஜித் குமார் கொலை வழக்கில் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அனை வருக்கும் தெரியும் என்றும் குறிப்பிட்டார். அந்த வழக்கை முதலில் சிபிசிஐடி விசாரித்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் காவல்துறையினர் என்பதால் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் வழக்கை சிபிஐக்கு மாற்ற அரசே முடிவு செய்ததையும் சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் 2021ஆம் ஆண்டில் 6,800 போதைப்பொருள் தடுப்பு வழக்கு கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2024ஆம் ஆண்டில் அது 11,000 வழக்கு களாக உயர்ந்துள்ளதாக கூறினார். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை காவல்துறை தீவிரப்படுத்தியதன் விளைவாகவே அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்ட தாகவும் அவர் விளக்கமளித்தார். சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகளுக்கு போதைப்பொருட்களை ஒற்றைக் காரணமாக கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் பேசுகையில், பெரிய குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் புகார்கள் பதிவு செய்வதில் மக்கள் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் அரசு, காவல்துறை, பள்ளிக் கல்வித்துறை மற்றும் சமூக நலத்துறை இணைந்து போக்சோ சட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், இதன் காரணமாக குழந்தைகள் மீது நடைபெறும் தவறுகள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தாமாகவே முன்வந்து புகார் அளிக்கும் நிலை உரு வாகி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் எஸ்சி, எஸ்டி சட்டம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் அந்த சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன என்றும் அவர் கூறினார். குற்றங்களின் புள்ளிவிவரங்களைப் பற்றி கவலைப்படாமல், வரும் ஒவ்வொரு புகாரையும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்பதே காவல்துறையின் நிலைப்பாடாக உள்ளதாகவும் வெங்கட்ராமன் குறிப்பிட்டார். சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை குறித்து சில மாதங்களாக ஊடகங்களில் உண்மைக்கு மாறான தகவல்கள் வெளி யாகி வருவதால், அதற்கான விளக்கத்தை வழங்கவே இந்த செய்தி யாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்ட தாகவும் அவர் தெரிவித்தார்.</p>
