தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆதிதிராவிடர் நல நிதி  வேறு திட்டங்களுக்கு  மாற்றப்படவில்லை வதந்திகளுக்குத் தமிழக அரசு முற்றுப்புள்ளி!

15 Feb 2026, 3:03 pm
ஆதிதிராவிடர் நல நிதி  வேறு திட்டங்களுக்கு  மாற்றப்படவில்லை வதந்திகளுக்குத் தமிழக அரசு முற்றுப்புள்ளி!
<p><strong>ஆதிதிராவிடர் நல நிதி &nbsp;வேறு திட்டங்களுக்கு &nbsp;மாற்றப்படவில்லை வதந்திகளுக்குத் தமிழக அரசு முற்றுப்புள்ளி!</strong></p> <p>சென்னை, பிப். 15 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை &nbsp;(KMUT) திட்டத்திற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல நிதி பயன் படுத்தப்பட்டதாகச் சில ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் உண் மைக்குப் புறம்பானவை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கை யில், &ldquo;ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னர் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட &nbsp;நிதி ஒருபோதும் வேறு திட்டங்களுக்கு மாற்றப்படுவதில்லை. பட்ஜெட் நடை முறைப்படி ஒவ்வொரு திட்டத்திற்கும் பொது, ஆதிதிராவிடர், பழங்குடியினர் எனத் தனித்தனி கணக்குத் தலைப்பு கள் உள்ளன. அந்தந்த சமூகப் பயனாளி களுக்கான நிதி அவர்களுக்கு மட்டுமே சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகையாக வழங்கப் படும் கூடுதல் நிதியானது, அதற்கென ஒதுக்கப்பட்டத் தனி நிதியிலிருந்தே வழங்கப்படுகிறது. மேலும், இந்த நிதியைப் பாதுகாக்கத் தமிழக அரசு இயற்றியுள்ள தனிச் சட்டத் தின்படி, குறிப்பிட்ட நிதியாண்டில் பயன்படுத்தப்படாத நிதி பொது நிதியாக மாறாது; அது அடுத்த ஆண்டிற்கு அதே &nbsp;நோக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும். &nbsp;எனவே, நிதி மாற்றம் குறித்த குற்றச் சாட்டு ஆதாரமற்றது&rdquo; எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.