தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாய நிலங்களில் கட்டடங்கள்;தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள்!

5 Nov 2026, 11:21 pm
விவசாய நிலங்களில் கட்டடங்கள்;தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள்!

விவசாய நிலங்களில் கட்டடங்கள்;தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள்!

சென்னை, நவ. 5 –விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கு, ஏற்கெனவே உள்ள விதிகளில் புதிய திருத்தங்களைக் கொண்டுவந்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விளைநிலங்களை விவசாயம் அல்லாத நிலமாக மாற்றவும், அவற்றில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும் இனி கடுமையான நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும். இதற்கான திருத்தங்களை அரசு அறிவித்துள்ளது.

9 ஆவணங்கள் கட்டாயம்!

நிலத்தைப் பயன்பாடு மாற்றம் செய்து, கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள விரும்புவோர், நிலத்தின் கிரயப் பத்திரம் அல்லது குத்தகைப் பத்திரம், பட்டா நகல், சிட்டா

நகல், நிலத்தை சுற்றி 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள அனைத்து கட்டடங்களின் வரைபடம் சம்பந்தப்பட்ட நிலத்தின் சிட்டா நகல் என மொத்தமாக 9 ஆவணங்களைச் சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.

தடையில்லாச் சான்றிதழ்

விளைநிலம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர், வேளாண்மை துறையின் இணை இயக்குனர், நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஆகிய அதிகாரிகளிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். விளை நிலங்களில் வீடுகள் அல்லது கட்டடம் கட்ட விரும்பினால் நில ஆவணங்களை சமர்ப்பித்தால் மட்டும் போதாது. நிலத்தின் சுற்றுப்புற விவரங்கள், நீர் வெளியேறும் வசதி, உள்ளிட்டவற்றிற்கான விவரங்களுடன் அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.