தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு மருத்துவமனை சீர்கேடுகளைச் சரிசெய்ய அதிகாரிகள் நியமனம்

11 Jul 2026, 9:40 pm
அரசு மருத்துவமனை சீர்கேடுகளைச்  சரிசெய்ய அதிகாரிகள் நியமனம்
<p><strong>அரசு மருத்துவமனை சீர்கேடுகளைச் சரிசெய்ய அதிகாரிகள் நியமனம்</strong></p><p>சென்னை, ஜூலை 11 - மாநிலம் முழுவதும் உள்ள 31 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கள ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட சீர்கேடுகளைச் சரி செய்யத் தமிழக அரசு நடவடிக்கை மேற் கொண்டுள்ளது. மருத்துவர், செவிலியர் பற்றாக்குறை, நோயாளிகள் பராமரிப்பு, தூய்மைப் பணி, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி குறைபாடு, திருட்டு சம்பவங்கள், நாய்த் தொல்லை, ஊழல் உள்ளிட்ட மொத்தம் 304 குறைபாடு கள் இருப்பதாகக் கள ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, நோயாளிகள் பரா மரிப்பு உள்ளிட்ட புகார்களுக்கு உடனுக்கு டன் தீர்வு காணும் வகையில், பேராசிரியர் சுதர்சினி தலைமையில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கீழ் புதிய ‘தொடர்பு அதிகாரி’ பிரிவு தொடங்கப்பட்டு, 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். இதில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கீழ் 50 நோடல் அதி காரிகளும், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்தின் கீழ் 249 தொடர்பு அதி காரிகளும், பொது சுகாதாரத் துறையின் கீழ் 5 தொடர்பு அதிகாரிகளும் என மொத்தம் 304 பேர் நியமிக்கப்பட்டுப் பணி தொடங்கி யுள்ளனர். அந்தந்த மருத்துவமனைகளின் மருத்துவ நிலைய அதிகாரி அல்லது கண்காணிப்பா ளர்களில் ஒருவரே தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றுவார் என்றும், இவர்களை மாநில அளவில் ஒருங்கிணைக்க ஒரு சிறப்புத் தொடர்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சாந்தி ராஜகுமாரி தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.