மீள்பணியமர்வு உத்தரவைக் கைவிட அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
14 Jul 2026, 9:52 pm
<p><strong>மீள்பணியமர்வு உத்தரவைக் கைவிட அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்</strong></p><p>சென்னை, ஜூலை 14 - செவிலியர்களை அவசர சிகிச்சை மையங்களுக்கு மீள்பணி யமர்வு செய்யும் முடிவைக் கை விட்டு, உடனடியாகப் பணி நிரந்த ரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.பாஸ்கரன், பொதுச் செயலாளர் வெ.சோம சுந்தரம் ஆகியோர் வெளியிட்டு உள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் பொதுச் சுகாதாரத் துறையின் கீழ் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனை களில் இருந்து சுமார் 292 செவிலி யர்களை, மறுசீரமைப்பு என்ற பெயரில் 17 அவசர சிகிச்சை பிரிவு களுக்கு மாற்ற அரசு திட்டமிட்டு உள்ளது. ஏற்கெனவே கடுமையான செவிலியர் பற்றாக்குறை நில வும் சூழலில், இந்த மீள்பணிய மர்வால் மருத்துவச் சேவைகள் கடு மையாகப் பாதிக்கப்படும். மேலும், ஆயிரக்கணக்கான தொகுப்பூதிய செவிலியர்களின் பணி நிரந்தரமும் கேள்விக்குறியாகும். கடந்த ஆட்சியில் அவசர சிகிச்சை பிரிவுக்குப் புதிய பணியி டங்களை உருவாக்க பரிந்துரைக் கப்பட்டதை தற்போதைய அரசு நிராகரித்துள்ளது தவறான நட வடிக்கையாகும். எனவே, தவெக அரசு தனது தேர்தல் வாக்கு றுதிப்படி தொகுப்பூதிய செவிலி யர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; அவசர சிகிச்சை மை யங்களுக்குப் புதிய பணியி டங்களை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.</p>
