காலிப் பணியிடங்களை நிரப்பிடக் கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா
28 Oct 2026, 9:30 pm
<p><strong>காலிப் பணியிடங்களை நிரப்பிடக் கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா</strong></p><p>விருதுநகர், அக்.29-பழைய ஓய்வூதியத் திட் டத்தை உடனடியாக அமல் படுத்த வேண்டும், சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், செவிலியர் கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம், பணி நிரந்தரம் வழங்க வேண்டும். அரசு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஒப்பந்த முறையைத் தவிர்க்க வேண்டும். கருணை அடிப்படை பணி நியமன வரம்பை மீண்டும் 25 சதவிகிதமாக்க வேண்டும். புதிய மருத் துவக் காப்பீட்டை அரசே நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப் போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பாண்டித்துரை தலைமை தாங்கினார். மாவட்டச்செயலாளர் கருப் பையா துவக்கி வைத்து பேசினார். மாவட்ட இணைச் செயலாளர் சிவக்குமார், ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் செல்வகணேசன் ஆகியோர்விளக்கிப் பேசினர். மாநிலச் செயலாளர் நீதிராஜா கண் டன உரையாற்றினார்.</p>
